குவெய்யாங் நகர மையத்திலுள்ள நீருற்று சதுக்கத்தில் சிறுபான்மை தேசிய இன மக்களின் விழா நாட்களில் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் இங்கு வந்து, தேசிய இன ஆடைகளை அணிந்துகொண்டு, அழகான நடனத்துடனும் இனிமையான பாடலுடனும் விழாவைக் கொண்டாடி, பயணிகளின் கண்களுக்கு விருந்து அளித்து, மகிழ்ச்சி தருவது வழக்கம்.

குவெய்யாங் நகரில் பல்வேறு காட்சித் தலங்களில் நுழைவுச் சீட்டு விலை வேறுபடுகின்றது. அது, ஒரு யுவான் முதல் 50 யுவான் வரை. பொதுவாகக் கூறின், சுற்றுலாச் செலவு அதிகமில்லை. இந்நகருக்குச் சென்று பயணம் மேற்கொள்வோர், அதன் தனிச்சிறப்பு வாய்ந்த சிற்றுண்டிகளை உண்ண மறந்துவிடக் கூடாது. அவற்றின் விலை மலிவு. ஒரு தடவையில் பல்வகை சிற்றுண்டிகளைச் சுவைத்துப்பார்த்த பிறகு தான், தங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைக் கண்டுபிடிக்கலாம்.
|