2005ஆம் ஆண்டு முதல், வட மேற்கு சீனாவின் Qing Hai மாநிலத்தில், யாங் சு ஆறு, மஞ்சள் ஆறு, லேங் சாங் கியாங் ஆறு ஆகிய மூன்று ஆறுகளின் தோற்வாய் இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில், உயிரின வாழ்க்கைச்சூழல் பாதுகாப்பு திட்டப்பணிக்கென சீனா சுமார் 100 கோடி யுனான் மதிப்புள்ள நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, இப்பிரதேசத்தின் உயிரின வாழ்க்கை சூழல் பூர்வாங்க ரீதியில் மேம்பட்டுள்ளது. இயற்கை பாதுகாப்பு மண்டலத்தில், சிறு நகரங்கள் மற்றும் பட்டிணங்களின் உருவாக்கம், வனத்தில் தீ தடுப்பு, எரியாற்றல் கட்டுமானம் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கென, 60 கோடி யுவான் மதிப்புள்ள சிறப்பு நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, குடியேற்றம், மக்களுக்கும் கால்நடைகளுக்கும் குடி நீர் உள்ளிட்ட திட்டப்பணிகளுக்கென, 42 கோடியே 60 லட்சம் யுவான் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகளின் விளைவாக, இப்பிரதேசத்தின் உயிரின வாழ்க்கைச் சூழல் பூர்வாங்க ரீதியில் மேம்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
|