• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-15 18:52:49    
பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி பற்றிய நுழைவுச் சீட்டு

cri

2008 பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் துவக்க விழா, நிறைவு விழா, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றைக் கண்டுகளிப்பதற்கான நுழைவுச் சீட்டு விற்பனைப் பணி இன்று அதிகாரப்பூர்வமாகத் துவங்கியது.விற்கப்படும் நுழைவுச் சீட்டுக்களின் மொத்த எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் சுமார் 75 விழுக்காட்டுச் சீட்டுகள் சீனாவிலும் ஏறக்குறைய 25 விழுக்காட்டுச் சீட்டுகள் வெளிநாடுகளிலும் விற்கப்படும்.  பெய்ச்சிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கான அமைப்புக் கமிட்டியின் நுழைவுச் சீட்டு விற்பனை பற்றிய அரசு இணையத் தளம் பயன்படுத்தி சீட்டு வாங்குவது என்பது மிகவும் நம்பகமான வழிமுறையாகும் என்று இந்த அமைப்புக் கமிட்டியின் சீட்டு விவகார மையத்தின் அதிகாரி ஒருவர் கூறினார். வெளிநாடு வாழ் சீன மக்களும் வெளிநாட்டவர்களும், நுழைவுச் சீட்டுக்களை வாங்க வேண்டுமானால் தத்தமது நாடுகள் அல்லது பிரதேசங்களிலுள்ள ஒலிம்பிக் கமிட்டி மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் அவர்.