• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-16 15:09:31    
சீன-ஆசியான் ஒத்துழைப்புக்குத் துணை புரியும் வட வளை குடா

cri

தென் மேற்குச் சீனாவின் குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த வட வளை குடா பற்றி குறிப்பிடும் போது, அதனை சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் உயிர் ஆற்றல் மிக்க வேறு 3 பிரதேசங்களான ச்சுஜியாங் ஆற்று முகத்துவாரப் பகுதி, யாங்சி ஆற்று முகத்துவாரப் பகுதி, போஹெய் வளை குடா ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது வழக்கமே. பின்னதாக வளர்ச்சியடைந்த போதிலும், ஆசியானுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரமாக விளங்கும் இவ்வளை குடா படிப்படியாக வளர்ச்சியடைந்துவருகின்றது. சீன-ஆசியன் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கப் பணி வேகமாக நடைபெறுவதுடன், வட வளை குடாப் பொருளாதார மண்டலத்தின் வெளிநாட்டுத் திறப்புப் பணி மும்முரமாக நடைபெற்றுவருகின்றது.

Qin zhou நகரம், குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் கடலோர மையப் பகுதியில் அமைந்துள்ளது. வட வளை குடாக் கரையில் புதிதாக வளர்ச்சியடைந்த இந்நகரம், தென் மேற்குச் சீனாவின் மிகவும் வசதியான கடல் போக்குவரத்து நெறிகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. சீன-ஆசியான் ஒத்துழைப்பில் அது தன்னிகரற்ற மேம்பாட்டைக் கொண்டுள்ளது. Qin zhou நகரைச் சீன-ஆசியான் இறக்குமதி-ஏற்றுமதிச் சரக்குகளின் முனையமாக்கும் பொருட்டு, நவீனப் பின்னணிச் சேவைத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்த உள்ளூர் அரசாங்கம் பெரும் முயற்சி மேற்கொண்டுவருகின்றது. அண்மையில் கட்டியமைக்கப்பட்ட சரக்குத் துறைமுகத்தில் வியட்நாமிலிருந்து கொண்டுவரப்பட்ட நிலக்கரியையும் ஆசியானைச் சேர்ந்த இதர நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட தாதுப்பொருட்களையும் எமது செய்தியாளர் கண்டுள்ளார். Qin zhou நகரின் அதிகாரி வாங் தேலன் இந்தத் தாதுப்பொருட்களைச் சுட்டியவாறு கூறியதாவது,

இந்தக் கறுப்பு நிற மங்கனிச தாதுப்பொருளும் இரும்புத் தாதுப்பொருளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்ப்டடுள்ளன. இவ்விடத்தை, இறக்குமதிப் பொருட்கள் ஒன்று குவித்துப் பதனீடு செய்யப்படும் சீனாவின் மிக முக்கியமானதொரு தளமாக்கலாம். தொழில் நிறுவனங்களின் பார்வையில், Qin zhou நகரம், மூலப் பொருள் சந்தையையும் விற்பனைச் சந்தையையும் இணைக்கும் இடமாகும். தற்போது சீனாவின் சில பெரிய செப்புக் கனிமப் பொருள் உற்பத்தித் தொழில் நிறுவனங்களும் உலோகவியல் தொழில் நிறுவனங்களும் Qin zhou நகரில் முதலீடு செய்ய விரும்புகின்றன. இவ்விடத்தின் மேம்பாடான இட அமைவு இதற்கு முக்கியக் காரணமாகும் என்றார் அவர்.

மென்மேலும் அதிகமான கனிமப் பொருட்கள் சீனாவுக்குத் தேவைப்படுவதால், ஆண்டுதோறும் Qin zhou நகரம் இறக்குமதி செய்யும் பல்வகை கனிமப் பொருட்கள் அதிகரித்துவருகின்றன. தற்போது துறைமுகம் கையாளும் பொருட்களின் அளவு முன்பு வடிவமைக்கப்பட்ட ஆற்றலைத் தாண்டியுள்ளது. ஒரு லட்சம் டன் எடையுள்ள பொருட்களைக் கையாளக் கூடிய 2 துறைமுகங்களின் கட்டுமானப் பணி நடைபெற்றுவருகின்றது. 50 ஆயிரம் டன் கொள்கலன்களைக் கொண்ட 2 துறைமுகங்களின் கட்டுமானப் பணியும் துவங்கவுள்ளது என்றும் அவர் கூறினார்.

வியட்நாமை ஒட்டியமைந்த கடலோர நகரான fang cheng துறைமுக நகரம், சீனாவுக்கும் வியட்நாமுக்குமிடையிலுள்ள முக்கிய எல்லை வர்த்தக நகரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இந்நகரைச் சேர்ந்த துங்சிங் நகரின் எல்லை வர்த்தக மேலாண்மைப் பணியகத் தலைவர் ceng li zhao எமது செய்தியாளரிடம் பேசுகையில்,

வியட்நாமிருந்து சீனாவுக்கு வரும் கப்பல்களில் வியட்நாமின் தேயிலை, கடல் வாழ்வன வகைப் பொருட்கள், பசும் அவரை முதலிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன. வியட்நாமுக்குச் செல்லும் சீனக் கப்பல்களில் வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், மென்ரக மற்றும் நெசவுப் பொருட்கள் ஆகியவை முக்கிய இடம் பெற்றுள்ளன. கட்டடப் பொருட்களும் உள்ளன என்றார்.

ஆசியான் நாடுகளுடன் தொடர்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தும் பொருட்டு, வட வளை குடா பகுதிப் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்தும் கருத்தைக் கடந்த ஆண்டு, குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசம் முன்வைத்தது. அதாவது, ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும் நாடுகள் வியட்நாம், தாய்லாந்து ஆகியவற்றிலிருந்து தென் சீனக் கடலுக்கு எதிரேயுள்ள மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், புருனை ஆகிய அண்டை நாடுகள் வரை விரிவாக்கப்படுவதாகும்.

அனைத்து வட வளை குடாப் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தை உருவாக்கி, அதனை சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டல உருவாக்கக் கட்டுக்கோப்புக்குள் ஒரு புதிய திட்டமாக மாற்றுவது என்பது, சீன-ஆசிய ஒத்துழைப்பு உள்ளடக்கத்தை அதிகரிப்பதற்கும் பெருளாதாரம் மேலும் வேகமாக வளர்வதற்கும் துணை புரியும் என்று குவாங்சி சுவான் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் துணைத் தலைவர் சென்வூ கூறினார். அவர் மேலும் கூறியதாவது,

இந்தப் புதிய நிலைமை, சீன-ஆசியான் ஒத்துழைப்பின் உள்ளடக்கங்களை விரிவாக்குவதற்கும் சீன-ஆசியான் தாராள வர்த்தக மண்டலத்தின் உருவாக்கத்துக்கும் உறுதுணையாக இருக்கும். இதன் விளைவாக, சீனா, ஆசியான் ஆகிய இரு பெரிய பொருளாதாரச் சமுகங்கள், இதிலிருந்து நலன்களைப் பெறலாம். ஆசியான் நாடுகளின் பொது விருப்பத்தையும் கோரிக்கையையும் இது பிரதிபலித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

அனைத்து வட வளை குடா நாடுகளின் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, மீன் பிடிப்பு ஆகிய துறைகளில் சீனா தொழில் நுட்ப மேம்பாட்டைக் கொண்டுள்ளது. அவற்றுடன் ஒத்துழைப்பதில் மாபெரும் உள்ளார்ந்த ஆற்றல் உள்ளது. இந்தோனேசியா, புருனை, வியட்நாம், பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளில் அதிக அளவிலான கனிமப் பொருட்கள் படிந்துகிடக்கின்றன. சீனாவின் வேகமாக அதிகரிக்கும் எரியாற்றல் தேவையை அவை நிறைவு செய்யலாம் என்றார் அவர்.

வட வளை குடா பொருளாதார மண்டல வளர்ச்சியுடனும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கையின் நடைமுறையாக்கத்துடனும் சீன-ஆசியான் குறிப்பாக குவாங்சி மற்றும் அனைத்து வட வளை குடா நாடுகளின் பொருளாதார வர்த்தக வளர்ச்சி தொடரும். அவற்றுக்கிடையிலான ஒத்துழைப்பும் பரிமாற்றமும் மேலும் சீராக நடைபெறுவது உறுதி.