சீன சுதேச மருந்தில் பாதகமான பக்க விளைவு உண்டா?இருந்தால் எவ்வளவு விகிதம்? என்று இப்போது சீன மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் ஆராய்ச்சி செய்து வருகின்றன. இன்றைய நிகழ்ச்சியில் விரிவடையும் மருந்து ஆராய்ச்சி பற்றி கலையரசியும் ராஜாராமும் உரையாடுகின்றார்கள்.
ராஜா..........நான் அறிந்தவரை இப்போது சீனாவில் 6000க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் ஈடுபடுகின்றன. அதன் எண்ணிக்கை உலகில் முதல் இடத்தை வகிக்கின்றது. ஆனால் புதிதாக மருந்துகளை ஆராய்ந்து தயாரிக்கும் திறன் அவ்வளவாக மக்களின் கவனத்தை ஈர்க்க வில்லை.
கலை...........ஆமாம். இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை காலாவதியான வெளிநாட்டு மருந்துத் தயாரிப்பு முறையைப் பின்பற்றி மருந்துகளை உற்பத்தி செய்கின்றன. சுயமுயற்சியில் புதிய மருந்துகளை ஆராய்ந்து தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
ராஜா.........இந்த மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் ஆராய்ச்சித் தரத்தை உயர்த்துவதற்காக சீன அரசு எதாவது முயற்சி செய்துள்ளதா?
கலை.........ஆமாம் உலக மருந்துத் தயாரிப்பு வரிசையில் சேரும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக சீன அரசு உதவியும் ஊக்கமும் அளித்து வருகின்றது. மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தற்சார்புடன் புதிய மருந்துகளை ஆராய்ந்து உருவாக்குவதற்கு ஆதரவு அளிக்கப்படுகின்றது.
ராஜா.................இது பற்றி நீங்கள் உதாரணங்களைச் சொல்லலாமா?
கலை.............சொல்கின்றேன். புள்ளிவிபரங்களின் படி, முன்பு சீன தேசிய உணவு மற்றும் மருந்து கண்காணிப்பு நிர்வாக ஆணையத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சில பத்து புதிய மருந்து தயாரிப்பு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சமமாக இல்லை.
ராஜா........இது மட்டுமல்ல குறிப்பிட்ட அளவில் சீன மருந்துத் தயாரிப்புத் துறையின் அளவு வளர்ச்சியும் தேக்கத்தில் உள்ளது.
கலை.......ஆமாம். தற்சார்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முன்னேற்றம் குறைவாகவே உள்ளது.
ராஜா......இந்த பிரச்சினைகள் பற்றி சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மருந்து விரிவாக்க பகுதித் தலைவர் யாங் ச்செ கூறியதாவது.

வெளிநாடுகளின் சிறப்பு உரிமையை பின்பற்றி மருந்துகளை நாங்கள் தயாரிக்கிறோம். ஆனால் இந்த மருந்துகள் பழையவை. சிகிச்சை பயன் மிகவும் சாதாரணமானது என்றார்.
ராஜா.......புதிய மருந்துகளை ஆராய்ந்து கண்டுபிடிப்பதில் சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு எந்த வகை இன்னல்கள் ஏற்படுகின்றன?
கலை........புதிய மருந்துகளை ஆராய்ந்து தயாரிப்பதில் இன்னல்கள் ஏற்படுகின்றன. பெருமளவில் பணம் தேவை என்பது மட்டுமல்ல, மருந்தை உருவாக்குவதற்கு நீண்டகாலமும் தேவைப்படுகின்றது.
ராஜா.....எத்தனை ஆண்டுகள் தேவை?
கலை.........புதிய மருந்தை ஆராய்ந்து உருவாக்க 8 முதல் 10 ஆண்டுகள் வரை பிடிக்கும். ஆராய்ச்சிக்கான செலவும் சராசரியாக சில கோடி அமெரிக்க டாலரை எட்டக் கூடும்.
ராஜா.......பெருமளவில் தொகை ஒதுக்கிய பின் பொருளாதார பயன் எப்படி?
கலை.......அவ்வளவு திருப்தி இல்லை. புள்ளிவிபரங்களின் படி மருந்தின் விளைவு, பாதகமான பக்க விளைவு ஆகியவற்றின் காரணமாக தற்போது உலகில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் மருந்துகளில் சராசரியாக 10 மருந்து வகைகளில் மதிப்பீட்டுச் சான்றிதழை பெற்று சந்தையில் நுழையும் மருந்து ஒன்று மட்டுமே.

ராஜா......இது உலகளாவிய இன்னல். சீனாவில் எப்படி?
கலை.......சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகத் தான் வளர்ச்சி அடைந்துள்ளன. அவற்றின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் திறன் மேம்பட்ட சர்வதேச தரத்தை எட்ட வில்லை. சில நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட பெரிய வெளிநாட்டு குழுமங்களுடன் சீன நிறுவனங்களை ஒப்பிட்டால் அளவு, நிதி, நுட்பம் ஆகியவற்றில் மாபெரும் இடைவெளி காணப்படுகிறது.
|