• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Tuesday    Apr 8th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-17 15:38:33    
சீனாவில் விமானத் தயாரிப்புத் தொழில்

cri
சீன விமானப்பயண சேவைத் தொழிலின் முதலாவது குழுமத்தின் துணைத் தலைவர் Geng Ru Guang கூறியதாவது,

 
உலகில் முன்னேறியப் போர் விமானம், விசைப்பொறி, ஏவுகணை ஆகியவற்றைச் சொந்தமாக ஆராய்ந்து தயாரிக்கும் 4வது பெரிய நாடாக சீனா மாறியுள்ளது. இதர முன்னேறிய நாடுகளுடனான சீனாவின் இடைவெளி குறைந்து வருகின்றது. தவிர, மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த சில மையத் தொழில் நுட்பங்களைச் சீனா கொண்டுள்ளது. அறிவியல் தொழில் நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும் விகிதம் பெரிதும் உயர்ந்துள்ளது. சில முக்கிய ஆய்வகங்கள் கட்டியமைக்கப்பட்டன. தொழில் நிறுவனங்களின் தொழில் நுட்ப மைய தொகுதியும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சொந்த ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு, சீனாவின் நவீனமாயமாக்க கட்டுமானத்துக்கும் தேசியப் பொருளாதாரத்துக்கும் மாபெரும் பங்காற்றியுள்ளது என்றார்.
சீனாவின் விமானப்பயண சேவை தொழில் துறை சிவில்விமானத்தின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு, சந்தை வளர்ச்சி ஆகியவற்றிலும் முன்னேற்றம் கண்டுள்ளது.
தனது குழுமம் ஆராய்ந்து தயாரித்த சீனாவின் புதிய தலைமுறை கிளை வழி பயணியர் விமானமான ARJ21 ரக விமானம் பற்றி Geng Ru Guang கூறினார். கிளை வழி பயணியர் விமானங்களில் மிக பெரிய விமானி இதற்கு உண்டு. மட்டுமல்ல மேற்கு சீனாவின் பீடபூமி விமான நிலையத்திலிருந்து பறப்பது இறங்குவது, சிக்கலான நெறியில் பறப்பது முதலிய கோரிக்கையையும் இது நிறைவேற்றலாம். தற்போது, இந்த விமானத்துக்கு 71 வர்த்தக பேரங்கள் கிடைத்துள்ளன. திட்டத்தின் படி, ARJ21 பயணியர் விமானம் அடுத்த ஆண்டு மார்சு திங்கள் நடைமுறையில் செயல்பட்த்தப்பட முடியும். 2009ஆம் ஆண்டு இது சந்தைக்குள் நுழையும்.


வேறு வகை கிளை வழி பயணியர் விமானம் பற்றி அவர் கூறியதாவது.
தொகுதியாக உற்பத்தி செய்யும் Xin zhou 60 எனும் விமானம் தொடர்பாகக் கடந்த ஆண்டு வெளிநாடுகளுடன் விற்பனை ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளோம். ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஓஷியானியா ஆகியவற்றுக்கு 62 விமானங்களை விற்பனை செய்வோம். சீனா சொந்தமாக ஆராய்ந்துத் தயாரித்த விமானம் வெளிநாடுகளுக்கு தொகுதி ஏற்றுமதி செய்யத் துவங்கியுள்ளோம் என்றார்.
ராணுவ விமானம் முதல் சிவில் விமானம் வரை, சொந்த ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு மூலம், சீன விமானப்பயண சேவை தொழில் துறை, மேம்பட்ட ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் சோதனை முறைமையை அமைந்துள்ளது. சீனத் தேசிய பாதுகாப்பின் நவீனமயமாக்க கட்டுமானத்துக்கும் தேசிய பொருளாதாரத்தின் கட்டுமானத்துக்கும் இவை தொடரவல்ல முக்கிய முன்னேற்றப் பங்கு ஆற்றுவது உறுதி என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 
நேயர்கள், இதுவரை சீனாவின் விமானப்பயண சேவைத் தொழில் துறை பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது.

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040