• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-17 15:47:29    
மின்னஞ்சல் மூலம் நண்பர்கள் தெரிவித்த கருத்துக்கள்

cri

கலை........... மின்னஞ்சல் மூலம் நண்பர்கள் தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம்.
லட்சுமி.......பெரிய காலாப்பட்டு பெ.சந்திரசேகரன் நேருக்கு நேர் நிகழ்ச்சியை கேட்டு தெரிவித்த கருத்து இதோ.
அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் புதுப்பாளையம் திரு.எஸ்.செல்வம் அவர்கள் நமது சீன வானொலி செய்தி முகவர் மலர்விழி அவர்களுடன் நேருக்குநேர் நிகழ்ச்சியை 6 வாரங்களாக கேட்டு வருகிறேன். மெய்சிலிர்த்து போகிறேன். சீன வானொலியின் தலைசிறந்த நேயர் என்பது உங்களுக்கு மிகப் பொருத்தம். இந்த உலகிற்கு ஒரு சூரியன். சீன வானொலிக்கு ஒரு எஸ்.செல்வம் என்பதை எவரும் மறுக்க முடியாது. 2006 ஆம் ஆண்டு சீன வானொலி வழங்கிய நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கி இருந்தீர்கள். பாராட்டுக்கள். சீன வானொலி எந்த அளவிற்கு உன்னிப்பாகக் கேட்டு குறிப்பு எடுத்து உள்ளீர்கள் என்பதை கேட்டு மகிழ்ந்தேன். இந்த நிகழ்ச்சி சீன வானொலியின் ஒவ்வொரு நேயருக்கும் ஊட்டச்சத்தாக அமைந்து உற்சாகத்துடன் உங்கள் பணியை செய்ய எங்களுக்கு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தியது. உங்களின் சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தை நோக்கி வீர நடைபோடுகிறது. நல்வாழ்த்துக்கள். நன்றி.

 
கலை.........செல்லூர்.நா.சீனிவாசன் தெரிவித்த கருத்து
திரு.சுந்தரன் அவர்களின் குரலில் உலா வந்த "மலர்ச்சோலை" நிகழ்ச்சி கேட்டோம். அதில் கடந்த ஆண்டு 54 லட்சம் மாணவர்கள் சீன பல்கலைக்கழகங்களில் தமது கல்வி அறிவை வளர்த்து வருகின்றனர் எனும் செய்தி எங்களின் செவியில் பாலை வார்த்தது,போல் இருந்தது. அதே சமயம் வியட்னாமில் பண்டைய இசையை பயன் படுத்தி பன்றியை வளர்த்து வருகின்றனர் எனும் செய்தியை மட்டும்; எங்களால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. தரமான படைப்புக்கு எஙகளின் மனமார்ந்த நன்றிகள் பல
லட்சுமி............அடுத்து வளவனூர் முத்து சிவக்குமரன் பண்பாடு பற்றி தெரிவித்த கருத்து
சீனப் பண்பாடு பகுதியில் இரவு நேர உணவு உண்ணும் போது, சீன மக்கள் தங்களின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களுக்குள் அளவளாவிக் கொள்வார்கள் என்ற தகவல் குடும்பத்தில் அனைவருக்கும் இடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்பட வழிவகுக்கும்.
அறிவியல் உலகம் பகுதியில் கூண்டுக்குள் குரங்குகளாய் என்ற தலைப்பில் கிளிட்டஸ் வழங்கிய தொகுப்பு சுவாரசியமாக இருந்தது. அந்த சோதனைக்கு பிறகு, குரங்குகள் மனிதர்களாக மாறி விட்டனவா அல்லது மனிதர்கள் "வேறு மாதிரியாக" ஆகி விட்டார்களா எனபதை அவர் கூறவே இல்லையே?


கலை...........அடுத்து .திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரன் தெரிவித்த கருத்து.
அறிவியல் உலகம் நிகழ்ச்சி மனிதர்களின் எண்ணங்களை அறிவது பற்றி மூளை குறித்து பல அரிய அறிவியல் தகவல்களை வழங்கியது. 'ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா என்ற தமிழ் திரைப்படப்பாடலில் மனிதர்களில் எத்தனை குணம் படைத்தவர்கள் உள்ளனர் என்பதை அறியத் தரும். மனிதர்களை பகுத்தாய்ந்து அவர்களை இனங்கண்டு எவர், எவர் எத்தகைய குணம் படைத்தவர்கள் என்பதை சிலர் மட்டுமே சில நாட்களில், சில மணி நேரத்திலும் கண்டுவிடுகின்றனர். பலர் பல நாள் பழகியும் பிறரது குணாதிசயத்தையும் எண்ணத்தையும் அறிய முடியாமல் அலையில் மாட்டித் தவிக்கும் படகு போல தவிக்கின்றனர். நிகழ்ச்சியில் கூறப்பட்டது போல மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ள நமது மூளைக்கு அபார சக்தியுண்டு. உண்மையில் இது ஒரு தனிக் கலைதான். இதில் கைதேர்ந்தவர்கள்தான், மக்கள் அதிகம் கூடும் தொழில்களில் பிரசித்தம் பெற்றுவிடுகின்றனர்.
லட்சுமி...............அடுத்து பாண்டிசேரி பெ.சந்திரசேகரனின் மின்னஞ்சல் கருத்து
சீனாவில் வளர்ந்து வரும், வரவேற்க்கப்பட்டு வரும் சிக்கன ரக ஓட்டல்களை பற்றிய தகவல்களை மிக விரிவாக கூறினார்கள். பெரிய ஓட்டல்களில் சென்று தங்கவும், சாப்பிடவும் முடியவில்லையே என்று நினைக்கும் சாதாரண மக்களின் கனவு நனவாகும். இதுபோன்ற சிக்கன க ஓடல்கள் பெரிதும் உதவும். இ போன்ற ஓட்டல்கள் மக்களுக்கு பயன் அளிக்கக் கூடியவை. ஒரு சில செய்திகள், எந்த பத்திரிக்கையிலும் பார்க்காத செய்திகளாகவே உள்ளன. பொது அறிவை வளர்க்கும் வகையில் நிகழ்ச்சி தயாரிக்கும் சுந்தரன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கலை...............வளவனூர் புதுப் பாளையம் எஸ் செல்வம்
இன்றைய கட்டுரையில் 'தேயிலைக் கடவுள் லோயோ' என்ற சுவையான கட்டுரையைக் கேட்டு மகிழ்ந்தேன். தேயிலையின் பிறப்பிடம் சீனா என நான் அறிந்திருக்கின்றேன். ஆனாலும், சீனாவிலிருந்து பிற நாடுகளுக்கு தேயிலை பரவல் செய்யப்பட்ட விதம் பற்றிய தகவல்களை இராஜாராம் அவர்கள் சுவைபட எடுத்துக் கூறினார். மேலும், சீனாவிலுள்ள பத்து வகை தேயிலைகள் பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தன. ஆனால், தேயிலை பற்றிய முதலாவது நூலை எழுதியதால் லோயோவைக் கடவுள் என மக்கள் குறிப்பிடுகின்றனர் என இறுதி வரியில் மட்டும் அவர் கூறினார். இன்னும் அதுபற்றி விரிவான தகவல்களை அளித்திருக்கலாம் என நினைக்கின்றேன். சீனாவின் தனிச்சிறப்புமிக்க பல அம்சங்கள் பற்றி இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து அறிமுகப்படுத்த வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.