• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-17 16:05:54    
மஞ்சள் ஆறு

cri

ரா......மஞ்சள் நதியை பண்டைய சீன மக்கள் மாமா நதி என்றும் மூட நம்பிக்கையின் காரணமாக அழைத்தனர். பழங்காலத்தில் மஞ்சள் நதியில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் புரியாமல் மக்கள் திகைத்தனர் நதிக்கடவுளை மாமா என்றழைத்தனர்.

போரிடும் தேசங்கள் காலகட்டதில் யெ யி நகரில் இருந்த சில ஊழல் அதிகாரிகளும், சூனியக்காரிகளும் மக்களின் மூட நம்பிக்கையைப் பயன்படுத்தி ஏராளமாகப் பொருள் சேர்த்தனர். நதி மாமாவுக்கு மனைவி இல்லாத மனக் குறைதான் வெள்ளப் பெருக்கிற்குக் காரணம் என்று கூறி ஆண்டுதோறும் ஒரு அழகிய இளம் பெண்ணை நதிமாமாவுக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தனர். அவளை அலங்கரித்து கட்டிலில் படுக்க வைத்து பணமும் நகைகளும் குவித்தனர். சூனியக் காரிகள் மந்திரம் சொல்ல, ஊழல் அதிகாரிகள் பணத்தையும் நகைகளையும் சுருட்டிக் கொண்டு அந்தப் பெண்ணைக் கட்டிலோடு ஆற்றில் தள்ளிவிட்டனர். ஒவ்வோர் ஆண்டும் இது தொடர்ந்தது. ஆனாலும் நதி மாமாவின் மனக் குறை தீவிரவில்லை.

 
அப்போது யெ யி நகருக்கு சிமன்போ என்றொரு அதிகாரி வந்தார். இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து நதி மாமாவுக்கு திருமணம் நடக்க ஏற்பாடான நாளன்று நதிக் கரைக்கு வந்தார். சூனியக்காரியும் ஊழல் அதிகாரிகளும் மகிழ்ச்சியடைந்து நதி மாமாவுக்கு மனைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அழகிய இளம் பெண்ணைக் காட்டினார்கள். உடனே இந்தப் பெண் அவ்வளவு அழகாய் இல்லையே. வேறு பெண்ணைத் தேர்ந்தெடுங்கள் என்று கூறிவிட்டு ஒரு சூனியக் காரிக் கிழவியைப் பார்த்து "இன்றும் இரண்டு நாளில் அழகான மனைவியைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறோம் என்று நதி மாமாவிடம் சொல்லிவிட்டு வா" என்று கூறி அவளை ஆற்றில் தள்ளிவிட்டார்.
இரண்டு நாட்கள் கழிந்த பின்னர். "என்னாச்சு, கிழவிக்கு? இன்னமும் திரும்பவில்லையே. நீ போய் பார்த்து வா" என்று ஒரு ஊழல் அதிகாரியை நதியில் தள்ளினார். இவ்வாறாக பல சூனியக்காரிகளும் ஊழல் அதிகாரிகளும் நதி மாமாவைச் சந்திப்பதற்காக நதியில் தள்ளப்பட்டனர். இதைக் கண்ட மக்கள் மனமகிழ்ந்து ஆர்ப்பரித்தனர். நதி மாமாவுக்கு மனைவியை அனுப்பும் பழக்கம் அதோடு மடிந்தது. சிமன்பாவ் மக்களை ஒன்றுதிரட்டி நதியைத் தூர்வாரினார்.

 
கால்வாய்களை வெட்டினார். வெள்ளப் பெருக்கின் கொடுமை ஓய்ந்து வேளாண்மை செழித்தது. நதிப்படுகையில் புதைந்துள்ள இயற்கை வகைகள் வெளியே எடுக்கப்படுகின்றன. எண்ணற்ற நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வளம் கொழிக்கும் பூமியாக மஞ்சள் நதிப் பள்ளத்தாக்கு மாறிவிட்டது.