• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-18 10:32:06    
சீனத்து தெனாலிராமன்

cri

ச்சி தேசத்தில் யான் ஸி என்பவர் மிகவும் பிரபலமாக இருந்தார். அவர் கல்வி கேள்விகளில் வல்லவர். வாதத்தில் அவரை யாரும் வென்றதில்லை. நாவண்மையால் மற்றவற்களைக் கட்டிப் போட்டுவிடுவார். சுருக்கமாகச் சொன்னால் நமது தெனாலிராமனைப் போல.

ஒரு முறை ச்சு தேசத்திற்கு தூதராக அனுப்பட்டார். அவர் வருகிறார் என்ற செய்தி கிடைத்ததுமே ச்சு தேசத்து மன்னனுக்கு ஒரே பரபரப்பு. "இந்த ஆளை எப்படியாவது மடக்க வேண்டும்" என நினைத்தான். அமைச்சர்களை அழைத்து ஆலோசனை கேட்டான். அப்போது ஓர் அமைச்சர் குறுக்கிட்டு,

"அரசே! யான் ஸி உங்கள் முன்னால் உட்கார்ந்திருக்கும் போது ஒருவனை கட்டி இழுத்து வருகிறோம். நீங்கள் இவன் யார்? என்ன செய்தான்? என்று கேளுங்கள். இவன் ஒரு திருடன் என்று நான் சொன்வேன்" என்றார்.

"பலே! நல்ல யோசனை" என்று மன்னன் மனம் மகிழ்ந்தான்.

திட்டமிட்டபடி யான் ஸி வந்ததும் மன்னன் பெரியவிருந்து அளித்தான். விருந்து மண்டபத்தில் எல்லோரும் உட்கார்ந்திருந்த போது, கைகள் கட்டப்பட்ட ஒருவனை அமைச்சர் இழுத்து வந்தார்.

"அமைச்சரே! என்ன இது? யார் இவன்? என்ன குற்றம் செய்தான்?" என்று வினவினான்.

"மன்னா, இவன் ச்சி தேசத்தைச் சேர்ந்தவன். இவன் ஒரு திருடன்" என்றார் அமைச்சர்.

இதைக் கேட்டதும் ச்சு தேசத்து அரசன் பலமாகச் சிரித்தபடியே, யான் ஸியைப் பார்த்து, "என்னய்யா தூதரே, உங்க ச்சி தேசத்துல எல்லோருமே திருட்டுப்பசங்க தானா" என்று கூறி கிண்டலடித்தான்.

யான் ஸி தமது இருக்கையில் இருந்து எழுந்து நின்று மாகவும் பணிவாகப் பேசத் தொடங்கினார்.

"நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். ஹுவாய் நதிக்கு தென்கரையில் உள்ள உங்களுடைய ச்சு தேசத்தில் நார்த்தங்காய் மரத்தில் நார்த்தங்காய்கள் தான். காய்க்கின்றன. ஆனால் நதியின் வடகரையில் உள்ள ச்சி தேசத்தில் நார்த்தங்காய் மரத்தில் ஆரஞ்சு விளைகிறது என்று சொன்னார்கள். இரண்டு மரங்களும் ஒரே மாதிரிதான். இலைகளும் ஒரே மாதிரிதான். ஆனால் பழங்களின் சுவை மட்டும் வேறுவேறாக இருக்கிறது. இது எதனால்? என்ன காரணம்? இயறஅகைச் சூழலும், காலநிலையும் தான் காரணம். எனது ச்சி தேசத்தில் பிறக்கிற ஆட்கள் திருடுவது இல்லை. அதே ஆட்கள் உங்களுடைய ச்சு தேசத்தில் வந்தததும் திருடத் தொடங்குகிறார்கள். உங்களுடைய ச்சு தேசத்து மண்வாகு அப்படியோ! திருடத் தூண்டுகிறதோ!" என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் மன்னன் சிரித்து விட்டான். "ஆகா! என் மேலேயே திரும்பி விட்டீங்களே! உங்களை ஜெயிக்க இனி ஒருவன் பிறந்து தான் வரணும்" என்றான்.