
தாழ்ந்த நிலையிலான காப்புறுதி, விவசாயிகள் நகரங்களில் வேலை செய்யும் போது சந்திக்கும் மற்றொரு பிரச்சினையாகும். ஆனால், தொழில் விபத்துக்கான காப்பீடு, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட காப்பீடுகளை விவசாயத் தொழிலாளர்கள் பெறும் விகிதம், உயர்ந்து வருகிறது. மக்களுக்கு மகிழ்ச்சி தரும் முன்னேற்றம் இதுவாகும். ஹெய் லுங் ஜியாங் மாநிலத்தின் ஹார்பின் நகரில் வேலை செய்யும் விவசாயி லி துங் மெய் அம்மையார், சில திங்களுக்கு முன் வேலை செய்த போது வலது கையில் காயம் ஏற்பட்டது. அவர் கூறியதாவது—

"காயமுற்ற போது என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியாது. தொழில் விபத்துக்கான காப்பீடு இல்லாவிட்டால், மருத்துவச் சிகிச்சை மற்றும் மருந்து கட்டணத்தை நான் செலுத்த முடியாது" என்றார் அவர்.
தொழில் விபத்துக்கான காப்பீடு இருப்பதால், குடும்பத்துக்கு மேலும் பெரும் சுமை ஏற்படவில்லை. குணமடைந்த பின் தொடர்ந்து பணத்தை சம்பாதிக்கலாம். புத்தாண்டில் தனக்குப் பெரும் மகிழ்ச்சி தரும் விஷயம் இதுவாகும் என்று அவர் செய்தியாளரிடம் கூறினார்.
விவசாயத் தொழிலாளர்களின் கல்வி அறிவு தாழ்ந்த நிலையில் இருப்பதாலும், சிறப்பு தொழில் நுட்பங்களும் பாதுகாப்பு பற்றிய கருத்தும் பற்றாக்குறை என்பதாலும், தவிர்த்திருக்கக் கூடிய விபத்துகள் அவ்வப்போது ஏற்பட்டன. இது குறித்து, சீனாவின் பல இடங்களில், விவசாயத் தொழிலாளர்களுக்கான பயிற்சி வலுப்படுத்தப்பட்டுள்ளது. தொழில் நுட்பப் பயிற்சி பற்றிய கொள்கையின் முழுமையாக்கத்துடன், விவசாயத் தொழிலாளர்கள் பலர், தொழில் நிறுவனத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளனர்.
நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தரும் நடவடிக்கைகள் இவற்றுடன் நின்று விடவில்லை. முன்பு அவர்களின் குழந்தைகள் நகரங்களிலுள்ள பள்ளிகளில் கல்வி பயின்றால், சிறப்புக் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது இந்தக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர, விவசாயத் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான முதுமைக்காலக் காப்பீட்டு முறையை சீனச் சமூக உறுதியளிப்பு வாரியம் ஆக்கப்பூர்வமாக ஆராய்ந்து வருகிறது.

நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் குழந்தைகள்
நகரங்களில் வேலை செய்யும் விவசாயிகளின் உரிமை மற்றும் நலனைப் பேணிக்காக்கும் நீண்டகாலப் பயன் தரும் முறைமையை உருவாக்க வேண்டுமானால், மேற்கூறிய நடவடிக்கைகளைத் தவிர, அரசு மற்றும் தொழில் நிறுவனங்களின் பொறுப்பை வலுப்படுத்தி, தொடர்பான சட்டமியற்றலை மேம்படுத்த வேண்டும்.இறுதியில் விவசாயத் தொழிலாளர்களை நகரத் தொழிலாளர்களுடன் இணைந்து சமமான அணுகு முறையை அனுபவிக்கச் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
|