• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-19 10:53:22    
 சீனாவில் புகை பிடித்தல் தடுப்புத் திட்டம்

cri

புகை பிடிப்பு இல்லாத சீனாவை நோக்கி முன்னேறுவோம் என்ற திட்டம், ஏப்ரல் 6ம் நாள் சீனாவில் துவங்கியுள்ளது. நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான சீன மையம் இத்திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. புகை பிடித்தல் தடுப்பு நடவடிக்கைகள் மூலம், எதிர்வரும் 2、3 ஆண்டுகளில், பிறர் புகை பிடிப்பதால் பாதிக்கப்பட்டோரின் விகிதம், தற்போதைய 53 விழுக்காட்டிலிருந்து 30 விழுக்காட்டுக்குட் குறைக்கப்படுவது என்பது, இத்திட்டத்தின் குறியிலக்காகும்.

இன்றைய உலகில் சீனாவே, மிகப் பெரிய புகையிலை உற்பத்தி மற்றும் நுகர்வு நாடாக விளங்குகிறது. உலகளாவிய நிலையில்,110 கோடி புகை பிடிப்போரில் 35 கோடி பேர், சீன நாட்டவர்களே. சீனாவில், ஆண்களில் 66 விழக்காட்டினர் சிகரெட் குடிக்கின்றனர்.  இதனால் பெண்களும் குழந்தைகளுமாக 53 விழுக்காட்டினர், முக்கியமாகப் பாதிக்கப்பட்டவர்கள்.



வெள்ளிக்கிழமைதோறும் ஏற்படும் சாலை விபத்துக்கள்
பிரிட்டனில், வாரத்தில் வெள்ளிக்கிழமை தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன. சாலை விபத்துக்களின் மொத்த எண்ணிக்கையில், வெள்ளிக்கிழமை ஏற்படு்ம் விபத்துக்கள் 17விழுக்காட்டுக்கு மேலாகும். புதிய ஆய்வு முடிவு ஒன்று இத்தகவலை வழங்கியதாகப் பிரிட்டிஷ் செய்தி ஊடகங்கள் ஏப்ரல் 3ம் நாள் தெரிவித்துள்ளன. விபத்துப் பரிமாற்ற மையம் என்ற அமைப்பு, கடந்த ஆண்டில் இங்கிலாந்திலும் வெல்ஸிலும் நிகழ்ந்த 30 ஆயிரம் சாலை விபத்துக்களை ஆய்ந்து இம்முடிவுக்கு வந்துள்ளது. அனைவரும் வெகு விரைவில் வீட்டுக்குத் திரும்ப விரும்புவதால் வெள்ளிக்கிழமை சாலை விபத்து அதிக அளவில் ஏற்படுவதற்குக் காரணமாகும். வண்டி ஓட்டுநர்கள் வார இறுதியை எவ்வாறு கழிப்பது என்பது பற்றி நினைப்பதால் கனவு நிலையில் உள்ளனர் என்று இம்மையத்தின் இயக்குநர் ஸ்திஃபு எவன்ஸ் விவரித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை, விபத்துக்கள் உச்ச நிலை எய்தும். அந்நேரத்தில் ஏற்படும் விபத்துக்கள், அன்றைய மொத்த சாலை விபத்து எண்ணிக்கையில் 9.8 விழுக்காட்டை வகிக்கின்றன. அப்போது லட்சக்கணக்கான மக்கள் வீடு திரும்பத் துடியாய்த் துடிக்கின்றனர். ஓட்டுநர்கள் வண்டியை ஓட்டுவதில் நூற்றுக்கு நூறு கவனம் செலுத்தா விட்டால் சாலை விபத்துக்குள்ளாகுவார்கள் என்றார் எவன்ஸ்.