• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-19 17:02:08    
ஹெனான் அருங்காட்சியகத்தில் பண்டைக்கால இசை

cri

சீனாவின் ஹெனான் மாநிலத்தின் தலைநகரான சாங்சோவில் ஒரு சிறப்பான அருங்காட்சியகம் உள்ளது. இங்கு வந்து பார்வையிடுவோர், ஒரு சிறந்த இசை விழாவைக் கேட்டு ரசிக்கலாம். இவ்விசை விழாவில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகள் அனைத்தும், ஆராயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மூதாதையர் பயன்படுத்திய இசைக்கருவிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
நேயர்களே, நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது, மூவாயிரத்துக்கு அதிகமான ஆண்டுகளுக்கு முந்திய வரவேற்பு இசையாகும். ஹெனான் அருங்காட்சியகத்தில், ஹுவாசியா என்னும் பண்டைக்கால இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், இவ்விசையை இசைத்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஹெனான் அருங்காட்சியகம், பெரிய ரக பன்நோக்க வரலாற்று மற்றும் கலை அருங்காட்சியகமாகும். அதன் பரப்பளவு, சுமார் ஒரு லட்சம் சதுர மீட்டராகும். 1998ம் ஆண்டில் அது, அதிகாரப்பூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சுமார் 3 லட்சம் பயணிகள் இங்கு வந்து பார்வையிடுகின்றனர். இவ்வருங்காட்சியகத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் தொல் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இதில், சில பண்டைய இசை கருவிகளின் வடிவங்கள் மற்றும் மூலப்பொருட்கள், தனிச்சிறப்பியல்புடையவை மட்டுமல்ல, தாளலயமும் இணக்கமாக உள்ளது. சீனப்பண்டைக்கால இசையின் சீரிய நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.

 
பறவையின் எலும்பைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட புல்லாங்குழல், இதுவரை சீனாவில் கண்டறியப்பட்டுள்ள மிக பழைய குழாய் வடிவிலான இசைக்கருவியாகும். இந்த இசைக் குழுவின் இசை வழிக்காட்டு ஆசிரியர் WANG XUE அம்மையார் செய்தியாளரிடம் கூறியதாவது:
8000 ஆண்டுகளுக்கு முந்திய எலும்பு புல்லாங்குழல், ஏழு அசைகளை முழுமையாக வாசிக்கலாம் என்றார் அவர்.
மணி தொகுதி, இந்த பண்டைக்கால இசைக் குழுவில் மிக பெரிய இசைக்கருவியாகும். இவை, ஹெனானில் தோண்டி எடுக்கப்பட்ட பழைய மணி தொகுதியை மாதிரியாக தயாரிக்கப்பட்டன. சுமார் 2500 ஆண்டுகள் வரலாறுடைய பழைய மணி கோவையில் மொத்தம் 26 மணிகள் உள்ளன. சீனாவின் புராதன அரசக் குடும்பத்துக்குரிய தனி இசைக்கருவியாகும்.
ஹுவாசியா பண்டைய இசைக்குழுவில் பயன்படுத்தப்பட்ட பண்டைக்கால இசை கருவிகளில், மிகவும் பழைய இசைக்கருவி, 8000 ஆண்டு வரலாறுடையது. மிகவும் இளைய இசைக்கருவி, 2300 ஆண்டுகள் வரலாறுடையது. இவ்விசைக் குழுவின் உறுப்பினர் CHANG YI அம்மையார் எமது செய்தியாளரிடம் பேசுகையில், பண்டைக்கால இசைக்கருவியை இசைப்பதில், வளைந்து கொடுக்கும் முறையில் கலை நுட்பத்தில் தேர்ச்சிபெறுவது மிகவும் முக்கியமானது.


அரங்கேற்றத்தின் போது, ஹுவாசியா பண்டைக்கால இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், பண்டையரின் ஆடையை அணிந்து இவ்விசைக்கருவிகளை இசைப்பர். அதன் தனிச்சிறப்பியல்பான இசையும், இசைக்கருவி எடுத்துக்காட்டப்படும் முறையும், தொல்லியல் பற்றிய தகவல்களை ஆதாரமாக கொண்டவை. இந்த இசைக்குழு, தொன்மையான இசைப் பண்பாட்டு மரபு செல்வத்துக்குப் புத்துயிர் அளித்துள்ளது. அது, பண்டைக்கால இசைக்கருவி தொல் பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் வேறு வழிமுறையுமாகும் என்று, அருங்காட்சியகத்தின் ஆய்வாளர் லீ ஹொங் அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது