• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-20 14:53:48    
ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான நுழைவுச்சீட்டு

cri

15ம் நாள் முற்பகல், பெய்ஜிங்கில், பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக்கமிட்டி, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவு சீட்டு விற்பனையைத் துவங்குவதற்கான செய்தியாளர் கூட்டத்தை நடத்தியது. 2008ம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவு சீட்டுகள், உலக மக்களுக்கு விற்பனை செய்யப்பட துவங்கியுள்ளன என்று பெய்ஜிங் ஒலிம்பிக் அமைப்புக்கமிட்டியின் துணை நிரவாகத் தலைவரும் பொது செயலாளருமான வாங்வெய் அறிவித்தார். ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான முக்கிய ஏற்பாட்டு பணிகளில் ஒன்று, நுழைவு சீட்டு விற்பனையாகும் என்று அவர் கூறினார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் நுழைவு சீட்டு விற்பனைக்கான திட்டத்துக்கு இணங்க, 70 லட்சத்துக்கு மேலான நுழைவு சீட்டுகளை வாங்க பொது மக்கள் முன்பதிவு செய்யலாம். இவற்றில், 75 விழுக்காட்டு சீட்டுகள், சீனாவில் விற்பனை செய்யப்படும். 25 விழுக்காட்டு சீட்டுகள், வெளி நாடுகளில் விற்பனைசெய்யப்படும்.