சீனாவின் சிங்சியாங் உய் கூர் தன்னாட்சி பிரதேசத்தில், எழுத்தாளரும் ஓவியருமான மங்கோலிய இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் வாழ்க்கிறார். அவருடைய பெயர், சோ யா. 1998ம் ஆண்டு, அவர், சிங்சியாங்கில், தனியார் ஓவிய கண்காட்சி வெற்றிகரமாக நடத்தினார். அதற்கு பின் சோயா குறிப்பு தந்தையின் இறக்கைகள், இன்னொரு சொர்க்கம் முதலிய நூல்களை அவர் வெளியிட்டார். ஆனால், ஓவியம் தீட்டுவதும் கட்டுரை எழுதுவதும் அவரின் தொழில் அல்ல. இன்றைய நிகழ்ச்சியில், அவருடைய கதை கேட்போமா.
இளைய காலத்தில், சோயா இடைநிலை பள்ளியில் சீன மொழி ஆசிரியராக பணிபுரிந்தார். பின்னர், அவர் ஆசிரியர் பணியிலிருந்து விலகி, வீட்டுக்கு திரும்பி, கணவரையும் குழுந்தைகளையும் கவனித்தார். அதே வேளையில், சில நேரத்தில், தமக்கு மிக பிடிக்கும் படைப்பு பணியிலும் ஓவியம் தீட்டுவதிலும். இத்தகைய வாழ்க்கை, பத்து ஆண்டுகளாக நீட்டித்திருந்தது. அப்போது, அவர், கணவரைத் திருமணம் செய்த துவக்க காலத்தில், அவர்களுக்கு ஒரு சிறிய நில வீடு மட்டும் இருந்தது. எளிமையைன வாழ்க்கை இருந்த போதிலும், ஓவிய பேனாவுடன் சோயா மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். அவர் கூறியதாவது. தூய்மையான உணர்வுடன், ஓவியம் தீட்டுவதில் ஈடுபட வேண்டும். இப்படி்ததான், உலகத்தையும், தன்னையும் பிறரையும் விரும்ப முடியும். இசை கேட்டு ரசிக்கும் போது கண்களின் முன்னாள் ஏற்படும் கற்பனை காட்சியை நான் ஓவியமாக வரைவேன். எத்தகைய குணாதிசயம் இருக்கிறதோ அத்தகைய ஓவிய நடை இருக்கிறது. கலைஞரை அவரின் ஓழுக்கமே அவரின் ஓவிய நடையாகும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு, சீராக வாழ்ந்த பின் சோ யா, தமது ஓவிய நிலையை உயர்த்த வேண்டும் என்று எண்ணினார். தமது முயற்சி மூலம், தேர்வில் தேறி சிங்சியாங் கல்வி கல்லூரியில் நுழைந்து, ஓவிய கலை வகுப்பில் மேலும் பயின்றார். இரண்டு ஆண்டு கல்வியில், தமது ஓவிய படைப்புகளின் தரம் பெருமளவில், உயர்ந்து, சொந்த பாணி உருவாயிற்றுள்ளது. அவருடைய பெரும்பாளான ஓவிய படைப்புகள் பெண்மணியுடன் தொடர்புடைவை. பெண்மணியின், அழகான குணம் இவற்றில் காணப்படுகிறது. சிங்சியாங் ஆசிரியர் பல்கலைகழக்ததைச் சேர்ந்த ஓவிய கல்லூரியின் பேராசிரியர் வாங் சி ச்சிங், சோயாவின் ஓவியங்கள் பற்றி மதிப்பு அளித்தார். சீன ஓவியத்தின் உணர்ச்சியும், ஜப்பானிய ஓவியத்தின் சுவையும், புத்த மத அமைதியும் அவரின் ஓவியங்களுக்கு உண்டு என்றார் அவர். அவர் மேலும் கூறியதாவது.
அவர், திறமையுள்ள ஓவியராவார். சில நேரத்தில், நாங்கள் அவருடைய ஓவியங்களை பார்த்த போது, கனவில் மூழ்கினோம். இயற்கையான பூக்கள், புல், மரம் ஆகியவற்றை மணிதருடன் முதலியவை திறமையாக இணைத்தார் என்றார் அவர்.
|