2006ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை, 50 லட்சம் வறிய விவசாயிகள், வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு துணை புரியும் பொருட்டு, வறிய விவசாயிகளுக்கு பயிற்சி தரும் "Yu Lu" என்னும் திட்டத்தை சீனா மேலும் தூண்டும். சீன அரசவையைச் சேர்ந்த வறுமை ஒழிப்பு மற்றும் வளர்ச்சி தலைமை குழுவின் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் Liu Fu He இன்று பெய்சிங்கில் இதை தெரிவித்தார். "Yu Lu" திட்டம் என்பது, வறிய விவசாயிகளுக்கு தொழில் கல்வி, தொழில் நடத்தல் பற்றிய பயிற்சி, வேளாண்மை தொழில் நுட்பப் பயிற்சி ஆகியவற்றை தருவதன் மூலம், அவர்களின் கல்வி அறிவை உயர்த்தி, வேலை வாய்ப்பு பெறுவதிலும், தொழில் நடத்துவதிலும் அவர்களின் ஆற்றலை வலுப்படுத்தி, அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதாகும். கடந்த ஆண்டு இத்திட்டம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டது முதல், இது வரை 16 லட்சத்து 50 ஆயிரம் வறிய விவசாயிகளுக்கு பயிற்சி தரப்பட்டுள்ளது. அவர்களில், 12 லட்சத்து 70 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
|