• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-23 14:18:42    
புதிய மருந்து ஆராய்ச்சி அளவு அதிகரிப்பு ( பகுதி 2 )

cri

ராஜா.......எனக்கு புரிந்தது. மாபெரும் நிதிப் பற்றாக்குறை, கடும் இன்னல், நீண்டகால ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு காலகட்டம் ஆகியவை சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு தடைகளாக உள்ளன.

கலை.............சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், மருந்து தயாரிப்புத் தரத்தை உயர்த்தவும் சீன அரசு கடந்த சில ஆண்டுகளாக பல உதவி மற்றும் ஊக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ராஜா.......இந்த நடவடிக்கைகள் பற்றி கொஞ்சம் விபரமாக சொல்லுங்கள்.

கலை......முதலில் கொள்கை வழிகாட்டு விதிகளை சரிப்படுத்த வேண்டும்."மருந்து நிர்வாக சட்டம்","சிறப்புரிமை சட்டம்"உள்ளிட்ட சட்ட விதிகளை திருத்தி முழுமையாக்குவது, மற்ற நாடுகளின் மருந்துத் தயாரிப்பு குறிப்பை பின்பற்றி மருந்துகள் தயாரிக்கப்படுவதைக் கட்டுபடுத்துவது, புதிய மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபடும் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழிகாட்டுவது என்பன இந்த கொள்கை வழிகாட்டியில் அடங்கும்.

ராஜா......இரண்டாவது முயற்சி என்ன?

கலை......இரண்டாவது முயற்சி பற்றி குறிப்பிட்டால் சீன அரசு புதிய மருந்து ஆராய்ச்சி தயாரிப்புக்கான முதலீட்டை அதிகரிப்பதாகும். அறிவிய்ல ஆய்வுக் கழகத்தின் மூலம் புதிய மருந்துகளின் ஆராய்ச்சிக்கும் தயாரிப்புக்கும் சீன அரசு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளது. மேலும் தொழில் நிறுவனங்களின் முதலீட்டையும் ஊக்குவித்துள்ளது. சீன அறிவியல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கிராமப்புற மற்றும் சமூக வளர்ச்சிப் பகுதியின் துணை இயக்குனர் சன் ஹுன் இது பற்றி கூறியதாவது

ராஜா............பத்தாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் அறிவியல் தொழில் நுட்ப அமைச்சத்தின் மூலம் மருந்து தயாரிப்புக்கு 90 கோடி யுவான் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஊழியர்களுக்கான ஊதியம் இதில் சேர்க்கப்பட வில்லை. ஆகவே நாங்கள் எவ்வளவு முதலீடு செய்தோமோ அதே அளவு நிதி ஆராய்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.

கலை.........அதனுடன் வரிச் சலுகை மூலம் புதிய மருந்துகளின் ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சீன அரசு ஊக்கம் தருகின்றது.

ராஜா........அரசின் இந்த மாபெரும் ஊக்கத்துடன் சீன மருந்து தயாரிப்புத் துறையில் என்ன புதிய நிலைமை ஏற்படும்?

கலை.......மேலும் அதிகமான மருந்து தயாரிப்பு தொழில் நிறுவனங்கள் புதிய மருந்துகளை ஆராய்ந்து உருவாக்குவதில் மிகவும் கவனம் செலுத்தியுள்ளன.

ராஜா......உதாரணம் சொல்லுங்கள்.

கலை.......சீனாவில் மிக பெரிய மருந்து தயாரிப்பு குழுமமான ஷாங்காய் மருந்து குழுமம் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பிரிவுகளை நிறுவியுள்ளது. சிறிதுக் காலத்துக்கு முன் ஜப்பானிய நிறுவனத்துடன் மருந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஒத்துழைப்பு உடன்படிக்கை ஏற்படுத்தியுள்ளது. குவாஞ்சோ மருந்து தயாரிப்பு குழுமம் கடந்த 3 ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட்பத்தில் 80 கோடி யுவானை முதலீடு செய்தது.

ராஜா.......தனிச்சிறப்பு மிக்க சீன சுதேச மருந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சீனா ஏதாவது முயற்சி மேற்கொண்டுள்ளதா?

கலை...........ஆமாம். சீனா முழுமையாக ஆராய்ந்து தயாரித்த முதலாவது ரசாயன மருந்தான ARTEMISININ மருந்து சீன சுதேச மருந்து தயாரிப்பு விதியின் படி தயாரிக்கப்பட்ட மேலை நாட்டு மருந்தாகும்.

ராஜா......அந்த மருந்தின் விளைவு எப்படி?

கலை.......மருந்தின் விளைவு விரைவாக உள்ளது. சிகிச்சை விகிதம் உயர்வானது. வேறு மருந்தை தடுக்கும் தன்மை குறைந்த ARTEMISININ மருந்து வயிற்று போக்கு நோய் தடுப்பில் ஒரு மைல்கல்லாக சர்வதேச சமூகத்தால் பாராட்டப்படுகின்றது. இது பற்றி ஷாங்காய் பூஃசின் குழும்த்தின் துணை இயக்குனர் சன் ச்சீ யூ கூறியதாவது

ராஜா........ஆப்பிரிக்காவில் மூல மருந்து மற்ற மருந்துகளின் சக்தியை தாங்கும் திறமை மிக வலுவானது. சில நாடுகளில் இந்த விகிதம் 95 விழுக்காட்டை எட்டியுள்ளது. இந்த பழைய மருந்தை உட்கொண்டால் கோதுமை மாவு உட்கொள்வது போல இருக்கின்றது. மருந்து விளைவு மிக மிக குறைவு. தற்போது உலக சுகாதார அமைப்பு ARTEMISININ மருந்தை சிகிச்சைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது சீன தொழில் நிறுவனங்களுக்கு சீரான எதிர்கால வளர்ச்சியை வழங்குகின்றது என்றார் அவர்.

கலை........இப்போது சீனாவில் மேலும் அதிகமான சீன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பாரம்பரிய சீன சுதேச மருந்து ஆய்வில் கவனம் செலுத்தியுள்ளன.

ராஜா.......சீன சுதேச மருந்து கொண்டுள்ள ஒப்பற்ற மேம்பாடு புதிய மருந்து ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சீனத் தொழில் நிறுவனங்களின் உற்சாகத்தை தூண்டியுள்ளது என்பதில் ஐயமில்லை.

கலை........நேயர்கள் இதுவரை மருந்து ஆராய்ச்சி பற்றி கேட்டீர்கள்.

ராஜா......இத்துடன் நல வாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சி நிறைவடைகின்றது. அடுத்த முறை சந்திப்போம்.