• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-24 10:15:06    
ஒரு வகை அவரை வறுவல்

cri

வாணி -- க்ளீட்டஸ். இந்த நிகழ்ச்சியில் எதை பற்றி சமையல் குறிப்பு கூறுவோம்?

க்ளீட்டஸ் -- ஒரு வகை அவரை வறுவல் பற்றி இன்று கூறுவோம்.

வாணி -- ஆமாம். இறைச்சி ஒன்றும் இடமபெறாத வறுவல் இதுவாகும்.

க்ளீட்டஸ் -- செய்முறையும் எளிதானது.

வாணி -- ஆமாம். சைவ உணவு நேயர்கள் இதனை விரும்புவார்கள் என்று நம்புகின்றோம்.

வாணி -- அடுத்து, தேவையானவற்றை தெரிவிக்கின்றேன்.

அவரை 350 கிராம்

இஞ்சி 20 கிராம்

காடி 40 கிராம்

உப்பு 5 கிராம்

நல்லெண்ணெய் 10 கிராம்

காய்ந்த மிளகாய் 10 கிராம்

க்ளீட்டஸ் -- கடந்த நிகழ்ச்சியின் முடிவில் இவை பற்றி தெரிவித்துள்ளோம். பல நேயர்கள் இவற்றை ஏற்கனவே தயாரித்துள்ளனர் என்று நம்புகின்றேன்.

வாணி -- இனி, செய்முறை பற்றி கூறுவேன்.
அவரையை நன்றாக சுத்தம் செய்யுங்கள். இதன் நார்களை நீக்கலாம். வாணலியை அடுப்பின் மீது வைத்து, நீரை ஊற்றவும். அவரையை அதில் போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும்.

க்ளீட்டஸ் -- இது மிகவும் முக்கியம். வேக வைக்கபடாத சில வகை அவரை நச்சு தன்மை வாய்ந்தது.

வாணி -- ஆமாம். அவரையை நன்றாக வேகவைத்தப் பின், இவற்றை வெப்ப நீரிலிருந்து எடுத்து, குளிர் நீரில் வைக்கவும். ஒரு நிமிடத்துக்குப் பின், நீரிலிருந்து எடுத்து, தட்டில் வைக்கவும்.

உப்பையும் அவரையையும் கலந்து 5 நிமிடங்கள் அப்படியே இருக்கவிட வேண்டும். பின்னர், அவரையைத் துண்டுகளாக நறுக்கவும்.

இஞ்சியை நன்றாக நறுக்கிக்கொள்ள வேண்டும். காய்ந்த வாணலியை மீண்டும் அடுப்பின் மீது வைத்து நல்லெண்ணெயை இதில் ஊற்றவும். பிறகு நறுக்கிய இஞ்சி, காடி, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை நல்லெண்ணெயில் வைத்து, கொஞ்சம் வறுக்கவும். நல்ல வாசம் வந்த பிறகு, உடனடியாக அவரையை இவற்றைச் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இனிப்பு சுவை விரும்பினால், இதில் கொஞ்சம் சர்க்கரை சேர்க்கலாம். மேலும் 5 நிமிடத்துக்குப் பின், இந்த வறுவல் தயார்.

க்ளீட்டஸ் -- இந்த வறுவல் சிசுவான் மாநிலத்து வறுவல் வகையைச் சேர்ந்தது. செய் முறை மிகவும் எளிதானது. நேயர்கள் இதனை வீட்டில் தயாரித்து ருசி பார்க்கலாம்.

வாணி -- சரி. அடுத்த முறை ஒரு வகை இனிப்புபற்றி அறிமுகப்படுத்துவோம்.

க்ளீட்டஸ் -- அப்படியா. இனிப்பு விரும்பும் நேயர்களுக்கு இந்தக் குறிப்பு மகிழ்ச்சி தரும்.

வாணி -- ஆமாம். இதற்குத் தேவைப்படும் பொருட்களும் எளிதானது. வாழைப்பழம், சர்க்கரை, நல்லெண்ணெய், நீர் ஆகியவை போதும்.

க்ளீட்டஸ் -- சரி. இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறைவுறுகின்றது. வணக்கம் கூறி விடைபெறுவோர் வாணி, க்ளீட்டஸ்.