• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-24 15:32:34    
சீனாவில் தேசிய இன பல்கலைக்கழகம்

cri


சீனாவில் ஹென் இனத்தைத் தவிர, 55 சிறுபான்மை தேசிய இனங்கள் உள்ளன. நீண்டகாலமாக, சமூக வரலாறு, இயற்கை வசதி முதலிய காரணங்களால், சில சிறுபான்மை தேசிய இனங்களின் கல்வித் தரம், உள்ளூர் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியின் தேவையை நிறைவேற்றும் நிலையில் இல்லை. இதற்காக, தேசிய இனப் பிரதேசம் மற்றும் சிறுபான்மை தேசிய இனங்களின் உண்மை நிலைமைக்கிணங்க, பல ஆண்டுகளாக மத்திய அரசு பல்வகையான தேசிய இன பல்கலைக்கழகங்களைக் குறிப்பாக உயர் நிலை கல்வி நிலையங்களைக் கட்டியமைந்துள்ளது. இன்று, இவற்றில் ஒன்றான தென்மேற்கு தேசிய இனப் பல்கலைக்கழகம் பற்றி அறிமுகப்படுத்துகின்றோம். 
தென்மேற்கு தேசிய இன பல்கலைக்கழகம், தென்மேற்கு சீனாவின் சி சுவான் மாநிலத்தின் தலைநகர் சென் துவில் உள்ளது. 1951ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், நவ சீனா நிறுவப்பட்ட பின் கட்டியமைக்கப்பட்ட முதல் தொகுதி பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். சீனாவின் பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பல்கலைக்கழத்தில் உள்ளனர் என்று இதன் துணை வேந்தர் சென் மின் கூறினார். அவர் கூறியதாவது


சில ஆயிரம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் தேர்வில் வெற்றி பெற்று எமது பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். மேலும், பனி மலையிருந்து வந்த விருந்தினராக அழைக்கப்பட்ட ஒரு தஜிக் இன மாணவி, ஊரிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர ஒரு திங்களுக்கு மேலான நேரம் தேவைப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.
இந்தப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட கடந்த 50க்கும் அதிகான ஆண்டுகளில், 90 ஆயிரம் பல்வகை மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. அவர்களில், புதிய சீனாவின் முதலாவது திபெத் இன முனைவர் மாணவரும், முதலாவது ச்சியாங் இன முனைவர் மாணவரும் இடம்பெறுகின்றனர். தவிர, பல புகழ்பெற்ற நிபுணர்களும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமைசாலிகளும் இடம்பெறுகின்றனர். சீனத் தேசிய இனப் பிரதேசங்களின் கட்டுமானத்துக்கும் வளர்ச்சிக்கும் அவர்கள் சிறந்த பங்கு ஆற்றியுள்ளனர்.


இருந்தாலும், சீனத் தேசிய இனங்களின் மொழிகள் அதிகமானவை. பழக்க வழக்கங்களும் வேறுப்பட்டன. பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த 56 தேசிய இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்று கூடி, எப்படி இணக்கமாக வாழ்ந்து படிப்பை நிறைவேற்றுகின்றனர் என்பது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
யீ இன கழகத்தில், இணக்கத்தை உறுதிப்படுத்தி வேறுபாடுகளுக்கு மதிப்பு அளிக்கும் கருத்து கல்விப் பணியில் பயன்படுத்தப்படுகின்றது என்று இக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் வூனிதோச்சி கூறினார். தற்போது, இந்தக் கழகம், யீ இன மற்றும் ஹென் இன இரட்டை மொழிகள் பேசும் பட்ட படிப்பு திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முக்கிய இடமாகவும், முக்கிய யீ இன வியல் ஆய்வகம் ஆகவும் திகழ்கின்றது. அவர் கூறியதாவது.