• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-24 15:44:56    
சீன நாடகத் துறை

cri
நூறாவது ஆண்டை வரவேற்கும் சீன நாடகத் துறை என்பதில் சீனாவில் நாடகம் எப்படி உருவாக்கப்படுவதன் பின்னணி.
2007ம் ஆண்டு சீனாவில் நாடகம் பரவலாக்கப்பட்ட நூற்றாவது ஆண்டு நிறைவாகும். சீன நாடகத் துறையின் கடந்த நூறு ஆண்டு வளர்ச்சியை நினைவு செய்யும் வகையில் சீனப் பண்பாட்டு மற்றும் நாடக வட்டாரத்தின் ஏற்பாட்டில் சீனாவின் பல்வேறு இடங்களில் பல நாடக அரங்கேற்ற நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. இதற்கிடையில் நடந்த ஆய்வு கலந்துரையாடல் கூட்டங்களில் நாடக கலைஞர்கள் பாராட்டப்படுகின்றனர்.


நீங்கள் கேட்ட ஒலி "தேனீர் விடுதி"என்னும் நாடகத்தின் ஒலியாகும். இந்த நாடகம் சீனாவில் மிக புகழ் பெற்ற நாடகங்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. காலஞ்சென்ற புகழ்பெற்ற எழுத்தாளர் திரு லோ ஸெ இந்த நாடகத்தைப் படைத்தார். சிறிய தேனீர் விடுதியின் இடமாற்றம் மூலம் கடந்த நூற்றாண்டின் 40ம் ஆண்டுகளுக்கு முந்திய சீனாவின் 50 ஆண்டு வரலாறு வர்ணிக்கப்படுகின்றது. சீன நாடகத்தின் நூறு ஆண்டுகளை நினைவு செய்வதற்கான தலைசிறந்த நாடகங்களில் ஒன்றாக"தேனீர் விடுதி"என்னும் நாடகம் தெரிவு செய்யப்படுகின்றது.
நூறு ஆண்டுகளுக்கு முன் உரையாடல் மற்றும் சைகை வடிவத்தில் அரங்கேற்றப்படும் நாடகம் சீன மக்களுக்கு புதுமையாக அமைந்தது. பீகிங் ஒப்ரா போன்ற பாரம்பரிய இசை நாடகங்கள் சீன மக்களால் அறிந்து கொள்ளப்பட்டு வரவேற்கப்பட்டன.
பின்னர் ஐரோப்பாவில் பரவலாகிய நாடகம் சீனாவின் ஒரு பகுதி மக்களால் அறிந்து ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1907ம் ஆண்டில் ஜப்பானில் கல்வி பயின்ற சீன மாணவர்கள் நாடக குழு ஒன்றை நிறுவி டோக்கியோவில் பிரெஞ்சு எழுத்தாளர் Alexandre Dumax படைத்த The Lady of the Camellias என்னும் நாடகத்தின் ஒரு பகுதியை அரங்கேற்றினர். ஆகவே 1907ம் ஆண்டு சீனாவில் நாடகம் பரவலாக்கப்பட்ட துவக்க ஆண்டாக கருதப்பட்டது.

 
நாடகம் என்ற புதிய கலை வடிவம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் விரைவாக பரவலாக்கப்பட்டது. சீன வரலாறு முன்னேறியதுடன் ஒவ்வொரு கால கட்டத்திலும் புகழ் பெற்ற நாடகங்கள் படைக்கப்பட்டன. இந்த புகழ் பெற்ற நாடகங்களில் பெரும்பாலானவை நடப்பு நினைவு நடவடிக்கைகளில் அரங்கேற்றப்படுகின்றன. சீனாவின் தலைநகரான பெய்சிங் மாநகரில் ஏப்ரல் திங்களில் துவங்கிய நினைவு நடவடிக்கைகளில் 30க்கும் அதிகமான நாடகங்கள் மொத்தமாக அரங்கேற்றப்படுகின்றன. கிழக்கு சீனாவிலுள்ள ஷாங்காய், ஹாஞ்சோ, வட கிழக்கு சீனாவிலுள்ள சன் யான் முதலிய மா நகர்களிலும் புகழ்பெற்ற தலைசிறந்த நாடகங்கள் பல அடுத்தடுத்து அரங்கேற்றப்படும். நாடகங்கள் மீதான பார்வையாளர்களின் ஆர்வம் ஈர்க்கப்படும். சீன நாடகத் துறை நூறு ஆண்டுகளாக வளர்ந்தமை மக்களால் மீளாய்வு செய்யப்படும்.
சீனப் பண்பாட்டு அமைச்சகத்தின் கலை பகுதித் தலைவர் இன் சியௌ துங் செய்தியாளர்களுக்குப் பேட்டிகையில்

 
நூறு ஆண்டு எளிதான கருத்து அல்ல. நாடகத்தின் நூறு ஆண்டு வளர்ச்சியில் பிரதிநிதித்துவ தன்மை வாய்ந்த நாடகங்கள் பல உள்ளன. அரங்கேற்றங்களின் மூலம் சில நாடகங்கள் மிக பல பார்வையாளர்களால் வரவேற்கப்பட்டன. பல்வேறு கலை அரங்கேற்ற நடவடிக்கைகளில் அவற்றுக்கு பரிசு வழங்கப்பட்டன என்று இன் சியௌ துங் கூறினார்.
எடுத்துக்காட்டாக பெய்சிங் மக்கள் கலை கழகம் அரங்கேற்றிய ஆறு பகுதிகள் கொண்ட "குடும்பத்தின் இன்பம்"என்னும் நாடகம் மேற்கூறிய நாடகங்களில் ஒன்றாகும். பெய்சிங்கில் நாலா பக்க வீடுகளும் நடுவில் முற்றமும் கொண்ட கட்டடத்தில் வாழ்கின்ற சிற்பியின் குடும்பத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றம் பற்றி வர்ணிக்கப்படுகின்றது. இந்த நாடகம் 2005ம் ஆண்டில் அரங்கேற்றப்பட்ட பின் மிக பல பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது மக்களால் மிகவும் வரவேற்கப்பட்ட கலை நிகழச்சிகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.