அதிகமான எரியாற்றலை பயன்படுத்தும் தொழில்கள் மீதான கட்டுப்பாடு
cri
இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவில் அதிகமான எரியாற்றலைப் பயன்படுத்தும் ஒரு பகுதி பொருட்களின் ஏற்றுமதி ஒரு மடங்கு அதிகரித்தது. இப்போக்கைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, பூர்வாங்க பதனீட்டுப் பொருட்களின் ஏற்றுமதி வரி குறைப்பு விகிதத்தை மேலும் குறைக்கும் என்று சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்தக் கமிட்டியின் அதிகாரி ஒருவர் இன்று கூறினார். இக்கமிட்டி இன்று வெளியிட்ட தரவுகளின் படி, இவ்வாண்டின் முதலாவது காலாண்டில், சீனாவின் உருக்குச்சுருள், உருக்கு கட்டி, கற்கரி உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட பெருமளவில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில், இவ்வகை பொருட்களுக்கான தேவை அதிகம். விலை ஏற்றம். உள் நாட்டில் எரியாற்றல் பற்றாக்குறை நிலவும் நிலையில், பூர்வாங்க முறை பொருட்களை பெருமளவில் ஏற்றுமதி செய்வதினால், பெரும் எண்ணிக்கையிலான மூலவளத்தை செலவிட்டு, கடும் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமை தொடர கூடாது என்று இவ்வதிகாரி கூறினார். அன்னிய வர்த்தகத்தின் அதிகரிப்பு வழிமுறையை சீனா ஆக்கப்பூர்வமாக மாற்றி, ஏற்றுமதி பொருட்களின் கட்டமைப்பை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.
|
|