• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-26 14:12:17    
ஹுவாசியா பண்டைக்கால இசைக்குழு

cri

ஹுவாசியா பண்டைக்கால இசைக்குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள், பண்டையரின் ஆடையை அணிந்து இவ்விசைக்கருவிகளை இசைப்பர். அதன் தனிச்சிறப்பியல்பான இசையும், இசைக்கருவி எடுத்துக்காட்டப்படும் முறையும், தொல்லியல் பற்றிய தகவல்களை ஆதாரமாக கொண்டவை. இந்த இசைக்குழு, தொன்மையான இசைப் பண்பாட்டு மரபு செல்வத்துக்குப் புத்துயிர் அளித்துள்ளது. அது, பண்டைக்கால இசைக்கருவி தொல் பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் வேறு வழிமுறையுமாகும் என்று, அருங்காட்சியகத்தின் ஆய்வாளர் லீ ஹொங் அம்மையார் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:

 
பண்டைக்கால ஆடை அணிந்த இளைஞர்கள், புராதன இசையை இசைத்து, முந்திய வரலாற்றுச் சூழலுக்குத் திரும்புவதன் மூலம், அந்த பண்டைக்கால நிலைமையுடன் தற்போதைய மனிதர் தொடர்பைக் கொள்ளலாம் என்றார் அவர்.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்திய இசையை இசைக்கும் பொருட்டு, ஹெனான் அருங்காட்சியகம் 20க்கு அதிகமான பண்டைக்கால இசைக்கருவிகளைத் தயாரித்து, 2000ம் ஆண்டில், ஹுவாசியா பண்டைக்கால இசைக்குழுவை நிறுவியுள்ளது. தற்போது, இவ்விசைக்குழு, சுமார் 200 பண்டைக்கால இசைகளை இசைக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சாதாரண பயணிகள், ஹெனான் அருங்காட்சியகத்தில் தொல் பொருட்கள் கண்காட்சியைப் பார்த்து, பண்டைய இசையைக் கேட்டு ரசிக்க, விரும்புகின்றனர். இது மட்டுமல்ல, தென்கொரியா, தான்சான்னியா, தாய்லாந்து முதலிய நாடுகளின் தலைவர்களும் இதை வியந்து பாராட்டியுள்ளனர். சீனாவின் தைவான் மாநிலத்தின் பயணி WU HONG அம்மையார் கூறியதாவது:

 
இந்த அருங்காட்சியகத்தில் ஏராளமான தொல் பொருட்களைப் பார்த்து, இனிமையான மணி தொகுதி இசைத்த இசையைக் கேட்டு ரசிப்பது, எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்தது என்றார் அவர்.
ஒவ்வொரு அரங்கேற்றத்துக்குப் பிறகும், அரங்கேற்றத்தில் பங்கெடுக்க, பயணிகள் அழைக்கப்படுகின்றனர். இன்று, சில பிராஞ்சு பயணிகள், தங்கள் சொந்த ஊரின் நாட்டுப்புறப் பாடலைக் கூட்டாக இசையுடன் பாடினர். பண்டைக்கால இசைக்கருவியை, நவீன இசையுடன் இணைந்து, சீன இசைக்கலைஞர்களும் வெளிநாட்டு நண்பர்களும் சேர்ந்து வழங்கிய இந்தப் பாடல், மிகவும் இனிமையாக உள்ளது.