ச்சியுஹுவா மலை, சீனாவில் 4 புகழ்பெற்ற புத்த மத மலைகளில் ஒன்றாகத் திகழ்கின்றது. அது, மத்திய சீனாவின் அன்ஹுவெய் மாநிலத்தின் மேற்கு பகுதியிலுள்ள சிங்யாங் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அதன் நிலபரப்பளவு 120 சதுர கிலோமீட்டராகும். ச்சியுஹுவா மலை அவ்வளவு உயரமாக இல்லை. கடல் மட்டத்திலிருந்து சுமார் ஆயிரம் நீட்டர் உயரத்தில் 30க்கும் அதிகமான மலைகள் உள்ளன. எனினும், இவற்றில் மிக உயரமான மலையான ஷிவான் சிகரத்தின் உயரம் 1342 மீட்டர் மட்டுமே.மலையின் உயரம் முக்கியம் என்பதல்ல. தெய்வம் இருந்தால் அது புகழ் பெறும். ச்சியுஹுவா மலையில் 2 பேர் இருப்பதன் காரணமாக சீனாவில் புகழ்பெற்றது.

ச்சியுஹுவா மலைக்குச் செல்லும் வழியில் மலைத் தொடர்கள் எங்கெங்கும் காணப்படலாம். அருகில் பசுமையான கொடி செடிகளும் மரங்களும் வளர்கின்றன. தொலைவில் சமையல் புகை தென்படுகின்றது. மலைகளிடையில் காணப்படும் மஞ்சள் நிறச் சுவராலும் கறுப்பு நிற ஓடுகளாலும் ஆன வீடுகள் கோயில்களாகும்.
|