|
எரியாற்றலின் சிக்கனப் பயன்பாடு பற்றி
cri
|
2010ஆம் ஆண்டு வரை, எரியாற்றல் பயன்பாடு 20 விழுக்காடு குறைந்து, முக்கிய மாசுப்பொருட்களின் வெளியேற்ற அளவு, 10 விழுக்காடு குறையும் குறிக்கோளை நனவாக்குவதற்கு உத்தரவாதம் அளிக்கும் பொருட்டு, சீனா மேலும் பெரும் மனவுறுதியுடன், மேலும் வலுவான நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சீனத் தலைமையமைச்சர் வென் சியாபாவ் கூறியுள்ளார்.
இன்று பெய்சிங்கில் எரியாற்றலின் சிக்கனப் பயன்பாடும் மாசுபொருட்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதும் பற்றிய தொலைகாட்சி மற்றும் தொலைபேசி மூல கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார். இவ்வாண்டின் முதலாவது காலாண்டில் நிகழ்ந்த நிலைமையைப் பார்க்கும் போது, அதிக எரியாற்றல் பயன்பாடுடைய, கடும் தூய்மைக்கேட்டை ஏற்படுத்தும் தொழில்கள் அளவுக்கு மீறி வேகமாக வளர்ந்து, எரியாற்றலை சிக்கனமாகப் பயன்படுத்தி, மாசுப்பொருட்களின் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான பணிகள் கடுமையானவை என்று அவர் கூறினார்.
|
|