• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-27 17:09:11    
திபெத் இன மற்றும் பேய் இனத் திருமண விழா

cri

தென் மேற்குச் சீனாவின் யுன்னான் மாநிலத்தின் Di Qing என்னும் இடத்தில் அமைந்துள்ள திபெத் இனத் தன்னாட்சி நிர்வாகப் பிரதேசத்தில், திபெத் இனம், பேய் இனம், லிங் சுங் இனம் முதலிய 20க்கும் அதிகமான சிறுபான்மைத் தேசிய இனங்கள் வசிக்கின்றன. கம்பீரமான கிம் சாங் கியாங் ஆறு இங்கு வளைந்து ஓடுகின்றது. இன்றைய நிகழ்ச்சியில், திபெத் இன இளைஞர் மற்றும் பேய் இன இளம் பெண்ணின் திருமண விழாவில் கலந்து கொள்ள தங்களை அழைத்துச் செல்வோம்.

திபெத் இனத்தின் பாரம்பரிய இசையுடன், அதிகாலையிலேயே, திபெத் இன இளைஞர் Chalam Enjurஇன் குடும்பத்தினர்கள் முற்றத்தைச் சுத்தம் செய்தனர். வண்ண வண்ண மதக்கொடிகள் காற்று வீச பறக்கின்றன. மகிழ்ச்சியான சூழ்நிலை தாண்டவமாடுகின்றது. இக்குடும்பத்தின் மத மண்டபத்தில், அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர், சோளம், ஆப்பிள், அக்குரோடு முதலியவை வைக்கப்படுகின்றன. மணமகனின் குடும்பம் அறுவடை செய்துள்ளதை இவை காட்டுகின்றன. கிராமவாசிகள் மகிழ்ச்சி ததும்ப, மணமகனின் வீட்டிற்கு வந்து நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். பெற்றோர்கள், வாசலில் நின்ற வண்ணம், தொலைவிலிருந்து வந்த விருந்தினர்களுக்கு வெள்ளைவெள்ளை என்ற "Hada" என்னும் பட்டுத் துணியை அன்பளிப்புப் பொருளாக வழங்குகின்றனர். முற்றத்தில், உதவி செய்ய வருகை தந்துள்ள பெண்களில் சிலர், விருந்தினர்களுக்குத் தேனீர் வழங்குகின்றனர். வேறு சிலர், குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் சிற்றுண்டிகளை அளிக்கின்றனர். சிலர், திபெத் இன உணவுகளைத் தயாரிக்கின்றனர்.

Chalam Enjurஇன் வீடு, திபெத் இனத் தன்னாட்சி நிர்வாகப் பிரதேசத்தின் De Qin மாவட்டத்தைச் சேர்ந்த Ben Zi Lan வட்டத்தில் அமைந்துள்ளது. பண்டைக்காலம் தொட்டு, இவ்வட்டம், யுன்னான் மாநிலத்திலிருந்து திபெத்துக்குச் செல்லும் முக்கிய இடமாகத் திகழ்கின்றது. வளமான, விறுவிறுப்பான இவ்வட்டத்தில், முக்கியமாக திபெத் இனத்தவர்கள் வாழ்கின்றனர். தவிர, பேய் இனம், நசி இனம் முதலிய சிறுபான்மைத் தேசிய இனங்களும் வசிக்கின்றன. மணமகள் Zhang Hong Yan குடும்பத்தின் பேய் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களும் இங்கு வசிக்கின்றனர். அதிகாலையில், மணமகள், வட்டத்திலுள்ள முக சிகை அலங்காரக் கடையில் அலங்கரிக்கப்பட்டார். பேய் இனத்தின் பாரம்பரியத் திருமண ஆடையை அணிந்து அவர் காத்திருக்கின்றார்.
காலை 9 மணி அளவில், மணமகன் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மணமகளை வரவேற்க வந்தார். அப்போது, மணமகளின் குடும்பத்தினர்களிலுள்ள மணமகளை அனுப்புவோர் பாடத் துவங்கி, அனைவரும் மணமகனின் வீட்டை நோக்கி மகிழ்ச்சியோடு சென்றனர்.

மணமகனின் வீட்டில், ஒரு ஜோடி புதிய தம்பதி, இரு தரப்புகளின் தாய்தந்தைகளுக்கு "Hada" என்னும் வெள்ளை பட்டுத்துணியை அன்பளிப்பாக வழங்கிய பின், திருமணக் கொண்டாட்டம் துவங்கியது. மணமகன், முதலில், உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்தார். அவர் கூறியதாவது: 

"இன்று, இம்மங்கள நாளில், நாங்கள் இருவரும் திருமணம் செய்கின்றோம். தொலைவிலுள்ள நண்பர்களும் உற்றார் உறவினர்களும் வருகை தந்து உதவிடுகின்றனர். இதற்கு, நான் இதயப்பூர்வமாக நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்" என்றார்.

மணமகனின் தாய், 63 வயதான அ லியன், Ben Zi Lan வட்டத்திற்கு அருகிலும், தொலைவிலும் புகழ் பெற்ற திபெத் இனப்பாடகி. சீனத் திபெத் இன நாட்டுப்புறக் கலைஞர் என்ற முறையில் ஜப்பானில் பயணம் செய்தார். இன்று தம் மகனின் திருமண நாளாகும். எனவே, தாய், மகிழ்ச்சித் ததும்ப, திபெத் இன மொழியில் பாடினார். 

"தொலைவிலிருந்து உற்றார் உறவினர்கள் வருகின்றனர். தங்க மலையும், வெள்ளி மலையும் திறந்து விடும், இன்பமான பாதை, உங்கள் இருவருக்கும் காத்திருக்கிறது. நீங்கள், என்றுமே தங்கம் வெள்ளி போன்ற இன்பப் பாதையில் நடைபோடுவீர்களாக, கிம் சாங் சியாங் ஆற்று நீர் போல், இன்பம் வாழையடி வாழையாக நிலவ வாழ்த்துகின்றேன்" என்பது, இப்பாடலின் வரிகளாகும்.
மணமகள், Zhang Hong Yan, துவக்க நிலைப் பள்ளி ஆசிரியை. சிறுவயதிலிருந்தே, இவ்வட்டத்தில் வாழ்ந்து வருகின்றார். இன்று அவர் மிகவும் ஆனந்தமடைந்துள்ளார். அவர் கூறியதாவது:

"இன்று திருமணம் செய்கின்றோம். முதலில், பெற்றோர்களுக்கு நன்றி கூற வேண்டும். திருமண விழாவுக்கு உதவிடும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்" என்றார்.

திருமண விழாவுக்குப் பின், விருந்து நடைபெற்றது. விருந்தினர்கள் திபெத் இனத்தின் வெண்ணெய் தேனீரை அருந்திக்கொண்டே அரிசியால் தயாரிக்கப்பட்ட பல்வகை உணவுகளை உட்கொண்டு மகிழ்ந்து, நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். Ben Zi Lan வட்டத்தின் ஒரு திபெத் இன மூத்தவர் Gerom பேசுகையில், Di Qing திபெத் இனத் தன்னாட்சி நிர்வாகப் பிரதேசத்தில், வெப்பமான கால நிலை. அதிகமான ஆறுகள். பரந்த சமவெளிகளில் பயிரிடலாம். உள்ளூர் இளைஞர்களின் திருமண விழாக்கள் பெரும்பாலும், இலையுதிர்கால அறுவடைக்குப் பின், குளிர்காலத்தில் நடைபெறுகின்றன.

"கிம்சா கியாங் ஆற்றுப் பள்ளத்தாக்கு பிரதேசத்தில் வாழும் எங்கள் திபெத் இனத்தவர்கள், விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் முக்கியமாக ஈடுபடுகின்றனர். நெல், சோளம், தினை ஆகியவை, எங்களின் தானியப் பயிர்களாகும். தொழிற்பயிர்களில், மிளகாய், அக்குரோட்டு, ஆப்பிள் முதலியவை அடங்கும். பனி அடர்ந்த பீடபூமியில் வாழும் திபெத் இன மக்கள், கால் நடை வளர்ப்பை முக்கியமாகக் கொள்கின்றனர். இலையுதிர்காலத்துக்குப் பின், இளைஞர்கள் திருமணம் செய்யும் விழா, எங்கள் திபெத் இனத்தவர்களின் வேளாண் பண்பாட்டின் பழக்க வழக்கத்தை மிகுதியும் காட்டுகின்றது" என்றார்.

சுவையான உணவுப் பொருட்களை ருசிபார்த்த பின், அனைவரும் மணமகனின் வீட்டுக்கு அருகிலான சதுக்கத்தில் ஒன்றுகூடி ஆடுகின்றனர். வட்ட நடனம் என, இது அழைக்கப்படுகின்றது. இது ஒரு கூட்டாண்மை நாட்டுப்புற நடனமாகும். விழா நாட்களிலும் முக்கிய கொண்டாட்டங்களிலும் அனைவரும் திரண்டு ஆனந்தமாக பாடிக்கொண்டே ஆடுவார்கள். குறைந்தது, சிலர், ஆகக்கூடியது, பல பத்து பேர், சில நூறு பேர் ஆடுவார்கள்.