• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-27 17:35:58    
உலக விளையாட்டு மாநாடு

cri

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் லோகு 23ம் நாள் பெய்ஜிங்கை அடைந்து தமது 5 நாள் பயணத்தைத் துவக்கினார்.

லோகு உலக விளையாட்டு மாநாட்டில் கலந்து கொள்வார். தவிர, அவர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழுவின் கூட்டத்துக்குத் தலைமை தாங்குவார். 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி, 2012ம் ஆண்டு இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி உள்ளிட்ட அடுத்த சில ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கான ஆயத்த பணிகள் பற்றிய அறிக்கைகளைக் கேட்டறிவார். 2007ம் ஆண்டு சர்வதேச விளையாட்டு மாநாடு, 23ம் நாள் முதல் 27ம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. பல்வேறு சர்வதேச விளையாட்டு சம்மேளனங்கள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டுடன் தொடர்புடைய துறைகளின் 1000க்கு மேலான பிரதிநிதகள், இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிக்கான அமைப்புக் குழு இது வரை நடத்திய மிக பெரியளவிலான சர்வதேச கூட்டம் இதுவாகும்.