அவருடைய ஓவியங்களை, சிங்சியாங் ஓவிய சங்கத்தின் தலைவர் வூ ச்சி வைங் பாராட்டினார். அவருடைய ஓவிய கண்காட்சிக்கு அவர் முன்னுரையும் எழுதினார். விளைவாக சோயாவின் தனிப்பட்ட ஓவிய கண்காட்சி தடையின்றி நடைபெற்றது. திட்டப்படி, 5 நாள் நடைபெறவிருந்த கண்காட்சி 10 நாட்களாக நீடித்திருந்தது. இதற்கிடையில் மற்ற பிற நகரங்களிலிருந்து வந்த பலர் ஓவிய கண்காட்சியை பார்வையிட்டனர். சிங்ச்சியாங் பல்கலைகழகத்தின் ஆசிரியர்கள், தமது மாணவர்களை அழைத்து சோயாவின் ஓவிய கண்காட்சியை பார்வையிட்டனர். இது பற்றி சோயா கூறியதாவது
நான் பிழையற்ற அழகான பொருட்களை விரும்புகிறேன். வறிய வாழ்க்கையினாலும் நான் மன நிறைவடைந்தேன். செலவுக்கு என் வருமானமும், போதுமானது. நேரம் இருந்தால், ஓவியம் தீட்டுவை, எழுதுவதிலும் ஈடுபடுவேன். பரந்த சிறந்த மன உணர்வையும் வாழ்க்கையும் அனுபவிக்கிறேன் என்றார் அவர். சோயா கவிநயம் வாய்ந்த ஓவியத்தைத் தீட்டுவதில் நாட்டம் கொண்டுல்ளார். வாசகர்களுக்கு இதை பிடி்ககும். கவிதை மற்றும் ஓவியம், மனிதர் மற்றும் இயற்கை ஆகியவற்றை இமக்கமாக ஒன்றிணைப்பது, தாம் நாடும் உள்ளத குறிக் கோளாகும் என்றார் அவர். தொழில் முறை ஓவியருக்கு மேம்பாட்டுன் கூடிய படைப்புச் சூழலும் பாதுகாப்பான வாழ்க்கை உதத்ரவாதமும் உள்ளன. சோயாவும் இதை விரும்புகிறார். ஆனால், சுதந்திர ஓவியராக இருப்பதென்ற எண்ணம் அவருடைய மனத்தில் இருக்கின்றது. கலையில் ஈடுபட்டவர், மனத்தின் சுதந்திரத்தையும், தூய்மையையும் பேணிக்காமல் இருந்தால், அவருடைய கலை மனம் ஆகியவை ரசிகர்களை பாதிக்கும் என்றார் அவர் சோயா. ஓவியம் தீட்டுவது மற்றும் எழுதுவது தவிர, வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் அவரின் உணர்வுக்கு செல்வாக்கு ஏடுபடுத்துகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன், தாம் குசே என்னும் பிரதேசத்துக்குச் சென்ற அனுபவத்தை திரைப்படமாக அவர் இப்போது தயாரிக்கின்றார். மனிதமும் இயற்கையும் இணக்கமாகவும் நீண்டகாலமாகவும் பழகுவதில் அவர் கவனம் செலுத்துகின்றார். சிங்ச்சியாங்கின் கவிதை மற்றும் ஓவிய துறையில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரமுகராக அவர் மாறியுள்ளரா. சிங்சியாங் எழுத்தாளர் சேங் மொ சேங் மொ கூறியதாவது
சோயாவின் எழுத்துகள் மிக அழகானவை, தூய்மையானவை நான் அவருடைய படைப்புகளை மிகவும் விரும்புகிறேன்., அவருடைய படைப்புகளை வெளியிட தீர்மானிக்கும் என்னம் இரு ஆண்டுகளுக்கு முன் நமக்கு உண்டு. இதன் மூலம், மேலும் அதிகமான மக்கள் அவருடைய உரை நடைக்கட்டுரைகளையும் கவிதைகளையும் படித்து ரசிக்கலாம் என்றார் அவர். உலகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய மிக சிறப்பான வழிமுறைகள், ஓவியம் தீட்டுவதும், எழுதுவதுமாகும் என்று சோயா கருதினார். அவருடைய கையில் இவை ஒரே பயன் கொண்டுள்ளன. இவை உல்ளது உள்ளபடியே அவரது உணர்ச்சியை பதிவு செய்துள்ளன. வெவ்வேறான நேரங்களில் வெவ்வேறான முறைகளை அவர் தெரிவு செய்கிறார். இந்தப் படைப்பு வழியில் அவர் தொடர்ந்து தம் நடை போடுவார். நேயர்கள் இது வரை, தொழிலற்ற எழுத்தளரும் ஓவியருமான சோ யா அம்மையார் பற்றிறி கேட்டீர்கல். இத்துடன் சீன மகளிர் நிகழ்ச்சி நிறைவடைகிறது.
|