• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-30 09:10:50    
NBA கூடைப்பந்து போட்டி

cri

24ம் நாள் அமெரிக்காவின் NBA கூடைப்பந்து போட்டிக்கான மேற்கு பகுதியின் காலிறுதி ஆட்டத்தில் உபசரிப்பு அணியான Rockets அணி, Jazz அணியை 98-90 என்ற புள்ளிக் கணக்கில் மீண்டும் வென்று, 2-0 ஆட்ட கணக்கில் முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் McGradyயும் யோமிங்கும் திறமையாக விளையாடி மொத்தம் 58 புள்ளிகளைத் திரட்டினர். இருவரும் ராக்கெட் அணியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். தவிர கிழக்கு பகுதி போட்டியில், Pistons அணி, Magic அணியை 98-90 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்து, 2-0 ஆட்ட கணக்கில் முன்னிலையில் உள்ளது.

26ம் நாள் 3 கூடைப்பந்து ஆட்டங்கள் முடிவடைந்தன. மக்களின் கவனத்துக்குரிய Mavericks அணிக்கும் Warriors அணிக்குமிடையிலான போட்டியில் கடந்த ஆண்டு மேற்கு பகுதியின் சாம்பியனான Mavericks அணி, Warriors அணியை 112-99 என்ற புள்ளி கணக்கில் தோற்கடித்தது. இப்போட்டியில் Mavericks அணியின் Terry, Howard, Nowitzki ஆகிய 3 வீரர்கள் தலா 20க்கு மேலான புள்ளிகளை பெற்றனர். வேறு இரு ஆட்டங்களில், Nuggets அணி, Spurs அணியிடம் 88-97 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் சம நிலையில் உள்ளன. Wizards அணி, Cavaliers அணியிடம் 102-109 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்து, 0-2 என்ற ஆட்டக் கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது