1978ம் ஆண்டு முதல், 2006ம் ஆண்டு வரை சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, ஆண்டுக்கு சராசரியாக, 9.67 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதே காலத்தில் உலகின் 3.3 விழுக்காடு என்ற அதிகரிப்பு வேகத்தை, இது, பெரிதும் மிஞ்சியுள்ளது என்று சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் இயக்குநர் மா கேய் கூறினார்.
பல ஆண்டுகளின் வளர்ச்சி மூலம், சீன நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றல் பெருமளவில் அதிகரித்து, சர்வதேச தகுநிலை தெளிவாக உயர்ந்துள்ளது. பொருளாதார மொத்த அளவு, உலகில் 4வது இடம் வகித்துள்ளது. 2004ம் ஆண்டு முதல், சீனா, உலகளவில் 3வது பெரிய வர்த்தக நாடாக மாறியுள்ளது என்றும் மா கேய் குறிப்பிட்டார்.
|