2010ஆம் ஆண்டு வரை, சீனச் சேவை வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதி இறக்குமதித் தொகை, 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலரை எட்டக்கூடும். எதிர்வரும் சில ஆண்டுகளில், சீனச் சேவை வர்த்தகத்தின் ஏற்றுமதி இறக்குமதித் தொகையின் ஆண்டு அதிகரிப்பு விகிதம், 20 விழுக்காட்டைத் தாண்டும் என்று இது பொருட்படும். சீன வணிக அமைச்சின் சேவை வர்த்தகப் பகுதித் தலைவர் Hu Jing Yan அண்மையில் பெய்சிங்கில் இதை தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, சீனச் சேவை வர்த்தகத்தின் மொத்த தொகை, உலகில் வகிக்கும் விகிதாச்சாரம் உயர்ந்து வருகின்றது. ஆனால், நீண்டகாலமாக, சேவை வர்த்தகத்தில் பற்றாக்குறை நிலவி, விரிவாகி வருகின்றது என்று அவர் தெரிவித்தார். தற்போது, சீனச் சேவை வர்த்தகத்தின் ஏற்றுமதித் தொகை, வர்த்தகத்தின் மொத்த ஏற்றுமதித் தொகையில் வகிக்கும் விகிதாச்சாரம், உலகின் சராசரி நிலையில் அரை பகுதி மட்டுமே. பாரம்பரிய சேவை வர்த்தகம், முக்கிய தகுநிலையில் இடம்பெறுகின்றது. உலக சேவை வர்த்தக அளவில் முக்கியமாக இருக்கும் நாணயம், காப்பீடு, செய்தித்தொடர்பு உள்ளிட்ட தொழில்கள், பூர்வாங்க முறையில் வளர்ந்து வரும் கட்டத்தில் இருக்கின்றன என்று அவர் கூறினார்.
|