
இவ்வாண்டின் முதல் காலாண்டு வரை, சீனாவில் செல்லிடபேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 48 கோடியைத் தாண்டியுள்ளது. திங்கள்தோறும், 65 லட்சத்து 20 ஆயிரம் பேர் என்ற அளவில் இது அதிகரித்துள்ளது. சீனத் தகவல் தொழில் அமைச்சகத்தின் புள்ளி விபரம் இதை காட்டுகின்றது. புள்ளி விபரங்களின் படி, சீனாவில் நூற்றுக்கு 35 பேரிடம் செல்லிட பேசி உள்ளது. செல்லிட பேசியின் பரவல் விகிதத்தின் அதிகரிப்புடன், குறுந்தகவல்களை அனுப்பும் எண்ணிக்கையும், தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. முதலாவது காலாண்டில், செல்லிடபேசி மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவல்களின் எண்ணிக்கை, 13 ஆயிரத்து 580 கோடியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட இது 37 விழுக்காடு அதிகமாகும். தற்போது, சீனா, உலகில் செல்லிடபேசி பயன்படுத்துவோர் மிக அதிகமான நாடாகும். இது, மிகப் பெரிய செல்லிடபேசி ஏற்றுமதி தளமுமாகும்.
|