புள்ளி விபரங்களின் படி, இவ்வாண்டு பெய்சிங் மாநகரின் மென் பொருள் துறையில், திறமையாளர்களின் பற்றாக்குறை எண்ணிக்கை, 50 ஆயிரமாக இருக்கும். மென்பொருள் துறையில் கிடைக்கக்கூடிய மற்றும் தேவைப்படுகின்ற திறமைசாலிகளின் எண்ணிக்கையிலான முரண்பாட்டையும், கட்டமைப்பு முரண்பாட்டையும் தீர்க்க, இத்துறையின் திறமைசாலிகளுக்கான பயிற்சி மற்றும் உட்புகுத்தலை பெய்சிங் மாநகரம் வலுப்படுத்தும். நவீன தொழில் நுட்பம் சார் தொழிலை மையமாகக் கொண்டு, உயர் தொழில் நுட்ப ஆய்வு மற்றும் மேம்பாடு, உயர் தொழில் நுட்பத் தயாரிப்பு, உயர் நிலை நிர்வாகம் ஆகியவற்றில் திறமைசாலிகளுக்கான பயிற்சியை பெய்சிங் வலுப்படுத்தும். குழு உட்புகுத்தல், திட்டப்பணிகள் உட்புகுத்தல் உள்ளிட்ட முறைகளின் மூலம், உள்நாட்டு வெளிநாட்டு உயர் தொழில் நுட்பத் திறமைசாலிகளை ஈர்க்கும் என்று தெரிய வருகின்றது. இது வரை, பெய்சிங்கில், 30 ஆயிரம் உயர் நிலை மென்பொருள் தொழில் நிறுவனங்களின் திறமைசாலிகளுக்கு, சுமார் 40 கோடி யுவான் மதிப்புள்ள அரசின் சிறப்பு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
|