2002ம் ஆண்டு முதல், சிறந்த விதைகளுக்கென, சீன நடுவண் அரசு, ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள நிதியுதவி வழங்கியுள்ளது. இதனால் 5 கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் நன்மை பெற்றுள்ளன. தானிய விளைச்சலின் நிதானமான அதிகரிப்பு, விவசாயிகளின் தொடர்ச்சியான வருமான அதிகரிப்பு ஆகியவற்றை இது பெரிதும் மேம்படுத்தியுள்ளது. சீன விவசாய அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Xue Liang அண்மையில் இதனை தெரிவித்தார். இந்நிதியுதவி நடைமுறைக்கு வந்த கடந்த 5 ஆண்டுகளில், சீனாவில் தரமான தானிய தொழில் மண்டலம் உருவாவதை முன்னேற்றியுள்ளது. தரமான நெல் தொழில் மண்டலம், சிறப்பு பயன்பாட்டுக்கான தலைசிறந்த கோதுமை தொழில் மண்டலம், சிறப்பு பயன்பாட்டுக்கான சோளம் மேம்பாட்டு மண்டலம், அதிக எண்ணெய் தரும் சோயா அவரை மேம்பாட்டு மண்டலம் ஆகியவற்றின் உருவாக்கத்தை விரைவுபடுத்தியுள்ளது. உள்ளூர் விவசாயிகளின் வருமானமும் அடுத்தடுத்து அதிகரித்து வருகின்றது என்று அவர் கூறினார்.
|