கடந்த ஆண்டு, சீனாவின் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை, 12 கோடியை எட்டியது. இது, 2005ஆம் ஆண்டில் இருந்ததை விட சுமார் 10 விழுக்காடு அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள வேலை செய்பவர்களின் எண்ணிக்கையில், இது 15 விழுக்காட்டுக்கு அதிகமாகும். சீனத் தேசிய தொழிற்துறை மற்றும் வணிக நிர்வாகத் தலைமை அலுவலகம் வெளியிட்ட புதிய புள்ளி விபரம் இதை காட்டுகின்றது. புள்ளி விபரங்களின் படி, பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றி, நிதி வருமானத்தை அதிகரித்து, வேலை வாய்ப்பு பெறுவதை விரைவுபடுத்தி, நகர்கள் மற்றும் கிராமங்களின் சந்தையைச் சுறுசுறுப்பாக்கி, சமூகத்தின் அமைதியைப் பேணிக்காப்பதற்கு, தனியார் பொருளாதாரம் முக்கிய சக்தியாக மாறியுள்ளது. தனியார் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு சீனா தொடர்ந்து ஊக்கமளித்து, ஆதரவளித்து, வழிகாட்டும் என்றும், சந்தை நுழைவுக்கு அனுமதி வழங்குவதைத் தளர்த்தும் என்றும் தொழிற்துறை மற்றும் வணிக நிர்வாகத் தலைமை அலுவலகத்தின் பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.
|