இவ்வாண்டு நீர் சேமிப்பு திட்டப்பணிகளுக்கென 2960 கோடி யுவான் மதிப்புள்ள நிதித்தொகையை நடுவண் அரசு ஒதுக்கீடு செய்கின்றது. நீர் சேமிப்பு அமைச்சகத்திலிருந்து எமது செய்தியாளர் இதை அறிவித்தார். அபாய நிலையில் உள்ள நீர்த்தேக்கங்களின் சீரமைப்பு, கிராமங்களில் குடிநீர் பாதுகாப்பு, பெரிய அளவிலான பாசனப் பகுதிகளில் நீர் சிக்கனப்பயன்பாடு தொடர்பான சீரமைப்பு முதலிய துறைகளில் இந்நிதித்தொகை பயன்படுத்தப்படும் என்று தெரிய வருகின்றது.
|