வாணி-- இன்று ஒரு வகை வாத்து இறைச்சி உணவு தயாரிப்பது பற்று கூறுகின்றோம். க்ளீட்டஸ், தமிழகத்தில் கோழி இறைச்சி உண்பது அதிகம், வாத்து இறைச்சி சந்தையில் கடைக்குமா? தமிழர்கள் இதனை சாப்பிடுகிறீர்களா?
வாணி -- சீனர்கள் அடிக்கடி கோடைக்காலத்தில் வாத்து இறைச்சி சாப்பிடுகின்றோம். உடம்பில் ஈரலைக் குறைக்கலமாம் என்று முதியோர்கள் கூறுகின்றனர்.
க்ளீட்டஸ் -- அப்படியா? வாணி, இந்த வாத்து இறைச்சி தயாரிப்பது பற்றி நீங்கள் கூறலாமே.
வாணி -- முதலில், தேவையானவற்றை எடுத்து கூறுகின்றேன். வாத்து இறைச்சி 500 கிராம் சோஸ் 10 கிராம் பீர் 250 கிராம் அல்லதுசமையல மது50 கிராம் இனிப்பு பட்டாணி 5 கிராம், சிவப்பு மிளகாய் 5 கிராம் இஞ்சி 10 கிராம் பூண்டு 5 கிராம் கிராம்பு 1 கிராம் aniseed 2
க்ளீட்டஸ் -- தேவையான பொருட்கள் அதிகம். செய்முறை கஷ்டமா?
வாணி -- கஷ்டமில்லை. நீங்கள் கவனமாகக் கேளுங்கள். முதலில், வாத்து இறைச்சியை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இஞ்சியை பூண்டையும் சிறிதளவாக நறுக்கிக் கொள்ளுங்கள். சிவப்பு மிளகாயை மெல்லிய நூல்போல நறுக்க வேண்டும். அடுப்பின் மீது வாணலியை வைத்து, சிறிதளவு உணவு எண்ணெயை ஊற்றி, சூடுபடுத்தவும். பிறகு, வாத்து இறைச்சியை இதில் போட்டு, நன்றாக வதக்கவும். 2 நிமிடங்களுக்குப் பின்,இஞ்சி, பூண்டு, aniseed, கிராம்பு ஆகியவற்றை வாணலியில் போட்டு, வாத்து இறைச்சியுடன் சேர்ந்து வதக்கவும். மணம் வந்த பிறகு, பீரை இதில் ஊற்றி, தொடர்ந்து வேகவிடுங்கள்.உப்பு, சர்க்கரை, சோஸ் ஆகியவற்றை இப்போது வாணலியில் போடலாம்.
க்ளீட்டஸ் -- எவ்வளவு நேரம் வேகவைக்க வேண்டும்?
வாணி -- சுமார் 30 நிமிடங்கள் தேவை. இந்த நேரத்தில், வேறு ஒரு வாணலியில் பட்டாணியை வேகவைக்கலாம். பிறகு, வெந் நீரிலிருந்து வேகவைக்கப்பட்டப்பட்டாணியை வெளியே எடுக்கலாம். கடைசியாக, வாத்து இறைச்சி வறுவலில், மிளகாயையும் பட்டாணியையும் போடுங்கள். சுவையான வாத்து இறைச்சி வறுவல் தயார்.
க்ளீட்டஸ் -- இந்த வறுவலில் சிவப்பு, பச்சை முதலிய நிறங்களால், காண்பதற்கு அழகானது.
வாணி -- ஆமாம். நேயர்களே நீங்கள் வீட்டில் இதனை த் தயாரித்து ருசிப்பார்க்கவும்.
க்ளீட்டஸ் -- வாணி, அடுத்த வாரம். எந்த வகை வறுவல் நேயர்களுக்கு அறிமுகப்படுத்துவோம்?
வாணி -- அடுத்த வாரம், முட்டை, மீன் ஆகியவை இடம்பெறும் ஒரு வகை வறுவல் பற்றி நேயர்களுக்கு எடுத்து கூறுவோம். ஆர்வம் கொண்ட நேயர்கள், வீட்டில் 4 முட்டைகள், 200 கிராம் மீன் இறைச்சி வெங்காயம் முதலியவற்றை முன் கூட்டியே தயார் செய்து கொள்ளலாம்.
க்ளீட்டஸ் -- சரி நேயர்களே, இன்றைய சீன உணவு அரங்கம் நிகழ்ச்சி நிறுவு பெறுகின்றது. அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
வாணி -- வணக்கம். நேயர்களே.
|