• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-08 16:07:54    
வெளிநாடுகளிலிருந்து அனுபவங்களை கற்றுக் கொள்ளும் சீன நாடகத் துறை

cri
1907ம் ஆண்டு முதல் சீன மக்கள் நாடகத்தை அறிந்து ஏற்றுக் கொண்ட பின், கடந்த நூறு ஆண்டுகளாக சீன நாடகத் துறை வளர்ந்து சீனாவின் பாரம்பரிய இசை நாடகங்களுடன் இணைந்து முக்கிய அரங்கு கலை வடிவமாக செயல்படுகின்றது. 2006ம் ஆண்டில் பெய்சிங் மாநகரில் 40க்கும் மேலான நாடகங்கள் படைக்கப்பட்டு 1000 முறை அரங்கேற்றப்பட்டன. சமகால மக்களின் வாழ்க்கையிலுள்ள இன்னல்களும் பிரச்சினைகளும் பெரும்பாலான நாடகங்களால் வெளிகொணரப்பட்டன. வேறு சில நாடகங்களில் வேஷன் பாப் போன்ற முன்னேறிய எண்ணமும் வாழ்க்கை முறையும் பிரதிபலிக்கப்படுகின்றன. பல இளைஞர்களால் வரவேற்கப்படுகின்றன.
வுவாங் சியௌ யின் என்பவர் சீன அரசு நாடக சங்கத்தின் டிரெக்டராவார். நடைமுறையில் கவனம் செலுத்தி அதை வெளிகாட்டுவதும், தரமான வெளிநாட்டு படைப்புகளிலிருந்து தலைசிறந்த தன்மையை கற்றுக் கொள்வதும் நாடகத்தின் சீன மயமாக்க வளர்ச்சி போக்கில் குறிப்பிடத்தக்க இரண்டு தனிச் சிறப்பியல்புகளாகும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது

 
நடைமுறைக்கேற்ப உண்மையில் கவனம் செலுத்தும் அதேவேளையில் தலைசிறந்த வெளிநாட்டு நாடகங்களிலிருந்து அவற்றின் கலையாற்றலை ஏற்றுக் கொண்டுள்ளோம். இந்த முயற்சியின் மூலம் சீன நாடகத் துறை நூறு ஆண்டுகளாக வளர்ந்துள்ளது என்றார் அவர்.
இந்த நினைவு நடவடிக்கைகளில்"கோப்பன் ஹாக்கன்"என்னும் நாடகம் நாடக அரங்கேற்ற நடவடிக்கைகளில் அனுப்பப்பட்டது. இந்த நாடகம் மூன்று ஆண்டுகளுக்கு முன் புகழ் பெற்ற பிரிட்டன் நாடக எழுத்தாளர் Michael Fryan படைத்த நாடகத்தின் படி வுவாங் சியௌ யின் திருத்தி உருவாக்கிய நாடகமாகும். 2வது உலக போரில் அணு குண்டுகளை தயாரிப்பதில் ஈடுபட்ட ஜெர்மன் அறிவியலாளர்களின் மன முரண்பாட்டையும் துன்பத்தையும் இந்த நாடகம் எடுத்துக் காட்டுகின்றது. இந்த நாடகம் ஏற்கனவே சீனாவில் சுமார் 100 முறை அரங்கேற்றப்பட்டது. இந்த முறை அரங்கேற்றப்பட்ட போது அரங்கத்தில் இருக்கை யாவும் பார்வையாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. இன்னும் பல பார்வையாளர்கள் இரண்டு மணி நேரத்தில் நின்ற வாறு நாடகத்தை கண்டு ரசித்தனர். நாடகம் அரங்கேற்றப்பட்ட போது அவ்வப்போதும் சிரிப்பு ஒலி எதிரொலிக்கப்பட்டது. அறிவியலுக்கும் ஒழுக்கத்திற்குமிடையிலான உறவை எண்ணுமாறு நாடகம் பார்வையாளர்களை மீண்டும் எழுப்பபியுள்ளது

 
இந்த நாடகத்தின் உள்ளடக்கம் சிறப்பானது. இரு அறிவியலாளர்களுக்கிடையிலுள்ள எண்ணம் உண்மையாக காணப்படுகின்றது. தற்போது அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், மேற்படிப்பு பயிலும் ஆய்வாளர்கள், டாக்டர் பட்டத்தை பெறுவதற்காக படிக்கின்ற மாணவர்கள் ஆகியோர்களுக்கு இந்த நாடகம் நன்மை தந்துள்ளது. உயர் மட்டத்திலிருந்து இது அவர்களுக்கு வழிகாட்டியுள்ளது என்று பெண் பார்வையாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
சீனாவில் நாடகத்தின் வளர்ச்சி பற்றி ஆராயும் வகையில் இசை நாடக கலைஞர்கள் சங்கத்தின் அழைப்பின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட நிபுணர்களும் நாடக பிரமுகர்களும் ஆய்வு கருத்தரங்கில் கலந்து கொண்டனர். இவர்களில் ஒருவரான ச்சௌ சியுனுக்கு வயது 88, அவர் சீனாவின் நாடகத் துறையைத் தோற்றுவித்தவர்களில் ஒருவராவார். அவர் படைத்த குழந்தை நாடகங்கள் சமூகத்தில் மாபெரும் எதிரொலிப்பை எழுப்பியுள்ளன. அவர் கூறியதாவது. 
நாடக பயிற்சியுடன் நான் 70 ஆண்டுகள் வாழ்கின்றேன். இந்த நூறாவது ஆண்டு நினைவு நடவடிக்கைக்குப் பின் நாடகத் துறை சீனாவில் மேலும் வளர்ச்சி அடைய வேண்டும். சீனாவின் பண்பாட்டுத் தனிச்சிறப்பியல்பை பெற்றதுடன் சீன கலை தன்மையுடன் நாடகத் துறை வளர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
சீனப் பண்பாட்டு அமைச்சர் சன் சியா ச்சன் கருத்து தெரிவித்தார்.

 
நாடக வளர்ச்சியின் எதிர்காலம் நம்பிக்கையுடையது. இருந்தாலும் புதிய உயர் தொழில் நுட்பம் புதிய கலை வகையை உருவாக்கியுள்ளது. நாடகத்தை மட்டுமல்ல பார்வையாளர்களையும் இந்த புதிய கலை ஈர்க்க போட்டியிடுகின்றது. நாடகத்தை மேலும் வளரச் செய்யும் வகையில் மேலும் செழுமையான சிறந்த கலைப் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்று சீனப் பண்பாட்டு அமைச்சர் சன் சியா ச்சுன் கூறினார கூறினார்.