• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-08 16:15:53    
நேயர்கள் கடிதம் மூலம் தெரிவித்த கருத்தை பார்க்கலாம்

cri

கலை....... முதலில் மே தினத்திற்காக இராசிபுரம் எஸ் திலகவதி எழுதிய கருத்தை பார்க்கின்றோம்.
உயிருடன் கூடிய உடலைப் போல உழைப்புடன் கூடிய தொழிலை செய்து உயரிய மனதுடன் கூடிய எண்ணத்தை சேர்த்து இளைஞர்களே கனவு காணுங்கள். வளமான சீன வானொலியிடம் நட்பு கொள்வோம் என்று நாமும் செயலுடன் கூடிய நம்பிக்கையை வளர்த்து சீன வானொலியும் சீன வானொலி குடும்பத்தார்களும் மற்றும் செய்லபடும் அன்பர்கள் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள் என்று எஸ் திலகவதி எழுதுகிறார்.

 
கிளீ.......அருமையான கருத்து. பாராட்டுக்கள். அடுத்து
இந்திய சீன நட்புறவு மற்றும் கலாசார பரிமாற்ற நாள் பெப்ரவரி 12ம் நாளாகும். இந்திய சீன அரசுகள் கூட்டு ஒத்துழைப்புடன் நினைவுபடுத்திய நாளில் பண்டைக்கால இந்தியாவில் நாலந்தா பல்கலைக்கழகம் உலகப் புகழ் பெற்று விளங்கியது. அங்கு கல்வி பெற வந்த சீனாவின் யுவாங்சுவாங் கல்வி கற்று அங்கேயே ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார். பல அரிய இந்திய நூல்களை மொழிபெயர்த்து எடுத்துச் சென்றார். இந்த நூல்கள் சீனா ஜப்பான், கொரியா ஆகிய நாடுகளில் புத்த மதம் தழைக்க வழி வகுத்துள்ளன. யுவாங்சுவாங் நினைவு மண்டபம் நாலந்தாவில் உள்ளது. இந்த கலாசார தூதரும் யாத்திரிகருமான யுவாங்சுவாங் மண்டபத்தை புதுப்பிக்க இந்திய சீன நாடுகள் கூட்டு முயற்சியில் ஈடுப்பட்டன. யுவாங்சுவாங்கிற்கு பெருமை என்பதை விட இந்திய சீன மக்களுக்குத் தான் பெருமை என்று கூற வேண்டும் என்று விழுப்புரம் எஸ் பாண்டியராஜன் கூறினார்.
கலை....... தமிழ் மூலம் சீனம் நிகழ்ச்சி பற்றி புத்தகம் பெற விரும்புவதை தெரிவித்த தர்மபுரி ஏ அபுதுல் ஜாமீலின் வேண்டுகோள் பாருங்கள்.
நான் ஒரு சாதாரண நேயர் உங்கள் நிகழ்ச்சிகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தேன். சீன மொழி கற்கும் ஆர்வத்துடன் உங்களுடன் தொடர்பு கொண்டு தமிழ் மூலம் சீனம் என்ற புத்தகத்தை எனக்கு தரும்படி கடந்த ஆண்டின் மார்ச் திங்களில் கேட்டிருந்தேன். ஆனால் இதுவரை பெற வில்லை. காரணம் என்ன. கல்வி பெறுவதற்காக சிரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறினார்.
கிளீ........அபுதுல் ஜாமீலின் கருத்து உண்மைதான். ஆனால் புத்தகம் கண்டிப்பாக நேயர்களுக்கு விநியோகிக்க வேண்டும். பொறுமையுடன் காத்திருங்கள். அடுத்து மாசுப் பொருட்களின் சீன கட்டுப்பாட்டு முயற்சி பற்றிய முனுகப்பட்டு பி கண்ணன் சேகரின் கருத்து படிக்கலாம்.

 
சீனாவில் மாசுப் பொருட்களின் வெளியேற்ற அளவு கடந்த ஆண்டுகளில் 2 சதவீதம் குறைக்கப்பட்டு இருப்பது நல்ல முன் உதாரணமாக இருக்கலாம். இனிவரும் காலங்களில் அதாவது 2010ம் ஆண்டு காலத்திற்குள் 10 சதவீதம் அளவு மாசுப் பொருட்கள் வெளியேற்றம் குறைக்கப்பட இருக்கும் நடவடிக்கை சீன அரசு மேற்கொள்வதென்ற செய்தியை அறிந்தேன். பாராட்ட தக்க முயற்சி என்று கண்ணன் சேகர் கூறினார்.
கலை.....அடுத்து செய்திகளை கேட்க விரும்புகின்ற வாதாலூர் எல் இராமனாதனின் கருத்து படிக்கின்றோம்.
நீங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளில் செய்திகள் மிகவும் துல்லியமாக உள்ளது. எனக்கு உங்கள் செய்திகளில் அதிகமான ஆர்வம் கொண்டுள்ளேன். ஏனெனில் அனைத்து வகையான செய்திகளை மிக சுருக்கமாக சொல்லி விடுகிறீர்கள். இவற்றின் மூலம் உலகில் நிகழந்ததை அறிந்து கொள்ள முடியும். உலக நிலைமை பற்றிய எனது அறிவை அதிகரிப்பதற்கு மிகவும் பயனுள்ளது என்றார் எல் இராமனாதன்.


கிளீ........அடுத்து போட்டியாற்றலை உயர்த்தும் சீன அரசு சாரா தொழில் நிறுவனங்களின் புனரமைப்பு என்ற செய்தித் தொகுப்பு கேட்டு கருத்து தெரிவித்த தென் பொன்முடி தெ.நா.மணிகண்டன். பல வித புதுமைகளை கையாண்டு உற்பத்தியை பெருக்கி வெளிநாட்டு முதலீட்டு துறையினரை சீனாவின் பக்கம் ஈர்த்திடவும் சீன பொருளாதாரத்தை உயர்த்திடவும் சீன அரசும் அரசு சாரா தொழில் நிறுவனங்களும் இணைந்து மேற்கொண்டுள்ள கூட்டு வழி முறைகள் பற்றி அறிந்து கொண்டோம். ஒரு நாட்டிற்கு முக்கியமான வளங்களை பெற்று தருவது தொழில் துறை தான். அதை மேம்படுத்துவதற்கு சீன தொழில் நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது பாராட்டுக்குரியது தான் என்று தெ. நா. மணிகண்டன் கருத்து தெரிவித்தார்.