• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International Wednesday    Apr 9th   2025   
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-08 16:29:40    
தேன்மேற்கு தேசிய இன பல்கலைக்கழகம்

cri

வெவ்வேறான தேசிய இனங்களுக்கு தனிச்சிறப்புடைய பழக்கவழக்கங்களும், பண்பாட்டுப் பின்னணியும் உண்டம். இவற்றின் பண்பாடு, வழக்கங்கள், மத நம்பிக்கை முதலியவை இங்கே முழுமையாக மதிக்கப்படுகின்றன இந்த நிலைமையில், எமது சிறுபான்மை தேசிய இனக் கல்வியியல், முழுமையாகவும் பெரிதாகவும் வளர்ந்து வருகின்றது. சிறுபான்மை தேசிய இனங்களின் திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளிப்பதும் ஈடிணையற்றத் தனிச்சிறப்பாக மாறியுள்ளது என்றார் அவர்.


இந்தப் பல்கலைக்கழகத்தில் பயிலும் பல மாணவர்கள், மிக தூரத்தில் அமைந்துள்ள பொருளாதார வசதி குன்றிய பிரதேசங்களிலிருந்து வருகின்றனர். இது குறித்து, நாட்டின் தொடர்புடைய உதவி கொள்கையை பல்கலைக்கழகம் ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்தி, வறிய மாணவர்களுக்கு நாட்டின் கல்வி உதவி கடன் தொகையை வழங்குகின்றது. அதேவேளையில், வறிய மாணவர்கள் தங்களது கல்வியை நிறைவேற்றச் செய்ய அவர்களுக்கு வாய்ப்புகளையும் வழங்குகின்றது. கணிணி பொறியியல் துறையைச் சேர்ந்த சுவான் இன மாணவர் ரோ வென் அவர்களில் ஒருவராவர்,


எனது பெயர் ரோ வென். குவான் சி சுவான் இன தன்னாட்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர். எனது குடும்பம் வறிய குடும்பம். கல்வி உதவிடும் வேலை வாய்ப்பை பல்கலைக்கழகம் எனக்கு வழங்கியது. தேசிய கல்வி உதவி கடன் பணியின் துணையாளராகப் பணி புரிகின்றேன். எமது பல்கலைக்கழகத்தில், தேசிய கல்வி உதவி கடன் வாங்குவது தொடர்பான பணிக்குப் பொறுப்பேற்றுள்ளேன். பணியின் மூலம், சிறிது வருமானம் கிடைக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்த வரை, இந்தப் பணியிலிருந்து பணி அனுபவம் கிடைப்பது மேலும் முக்கியமானது என்றார் அவர்.
பல்கலைக்கழகத்திலான சிறந்த வாழ்க்கை மாணவர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது. பல்வேறு பெரிய ரக கொண்டாட்ட நிகழ்ச்சிகள், சொற்பொழிவு போட்டி, கையெழுத்துப் போட்டி முதலியவை இங்கே அடிக்கடி நடைபெறுகின்றன. குறிப்பாக, ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய இனத் தனிச்சிறப்பை வெளிப்படுத்தும் உணவுப் பண்பாட்டு விழா பல மாணவர்களை ஈர்த்துள்ளது. விழாவின் போது, பல்கலைக்கழகத்தின் விளையாட்டு சதுக்கத்தில், பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் தத்தமது தேசிய இன உணவு வகைகளைத் தயாரித்து விருந்தினர்களுக்கு வழங்குகின்றனர்.
வடமேற்கு சீனாவின் கான் சு மாநிலத்தைச் சேர்ந்த He Jian உற்சாகமிகுந்த திபெத்தின இளைஞராவார். அன்னிய மொழி துறையில் பயிலும் அவர் 3 ஆண்டுகள் வாழ்ந்து படிக்கும் தமது பல்கலைக்கழகத்தின் மீது ஆழ்ந்த உணர்ச்சி கொண்டுள்ளார்.

 
பல்கலைக்கழகத்தில் பண்பாட்டுச் சூழ்நிலை மிக சிறப்பானது. பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த, பல்வேறு பிரதேசங்களிலிருந்து வந்த சக மாணவர்களுடன் வாழ்ந்து படிப்பது, எனது அறிவை அதிகரிப்பதற்கும், கருத்துக்களை விரிவாக்குவதற்கும் மிகவும் துணை புரிகின்றது. வகுப்புத் தலைவருக்கான போட்டியில் கலந்து கொள்வது, பல நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வது, பல மாணவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது முதலியவை எனக்கு தன்னம்பிக்கையைத் தருகின்றன என்றார் அவர்.
தென்மேற்கு தேசிய இனப் பல்கலைக்கழகம் தலைமுறை தலைமுறையாக திறமைசாலிகளுக்குப் பயிற்சி அளித்துள்ளது. எதிர்காலத்தில், இணக்கமான முறையில் கல்வி அளிப்பது என்ற கருத்தைப்பணியில் தொடர்ந்து பயன்படுத்தி, புதிய ரக நவீனமயமாக்க பல்கலைக்கழகத்தை உருவாக்கப் பாடுபடவுள்ளதாக இப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சென் மின் கூறினார்.
நேயர்கள், இதுவரை, சீனாவின் தென் மேற்கு தேசிய இனப் பல்கலைக்கழகம் பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய அறிவியல், கல்வி மற்றும் நலவாழ்வுப் பாதுகாப்பு நிகழ்ச்சி நிறுவுறுகின்றது.
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040