ராஜா......கலை கடந்த மூன்று வகுப்புகளில் நாம் நேரம் பற்றிய 13 சொற்களை கற்றுக் கொண்டோம்.
கலை........ஆமாம். இன்றைய வகுப்பு துவங்குவதற்கு முன் நீங்கள் ஏதாவது பயிற்சி செய்ய வேண்டுமா?
ராஜா........வழக்கம் போல புதிய வகுப்பு துவங்குவதற்கு முன் முந்தைய வகுப்பில் கற்றுக் கொண்ட சொற்களை மறுபடி பேசிப் பயிற்சி செய்யலாம். சரிதானே.
கலை......ஆமாம். அப்படியே செய்வோம்.
ராஜா.......அப்படியானால் நான் முதலில் இந்த 13 சொற்களை நினைவுபடுத்தி சொல்லட்டுமா?
கலை.....தாராளமாக கூறுங்கள்.
ராஜா......சரி நான் சொல்கின்றேன். சௌ ஷாங், சௌ சென், ச்சுங் வூ, சியா வூ, வன் ஷாங், 早 上 早 晨 中 午 下 午 晚 上 யே லி, சன் யே. தியன், பிஃயென், மியௌ ஜி தியன் 夜 里 深 夜 点 分 秒 几 点
கலை........ராஜா நன்றாக நினைவில் வைத்திருக்கிறீர்கள். நாம் கற்றுக் கொண்ட சொற்களை இன்றைய வகுப்பில் முக்கியமாக பேசிப் பயிற்சி செய்வோம்.
ரா......... இப்போது பயிற்சியைத் துவக்கலாமா?
கலை.......துவக்கலாம். நான் முதலில் சொல்வேன். நீங்கள் என்னை பின்பற்றுங்கள்.
ரா............சரி.
கலை.......சியன் ச்சை ஜி தியன் லா? 现 在 几 点 了?
ரா....... சியன் ச்சை ஜி தியன் லா? 现 在 几 点 了?
இப்போது மணி என்ன?
கலை....... 现 在 是 早 上 八 点。 சியன் ச்சை ஸ் சௌ ஷாங் பா தியன்
ரா............ 现 在 是 早 上 八 点。 சியன் ச்சை ஸ் சௌ ஷாங் பா தியன் இப்போது நேரம் காலை எட்டு மணி நேரம்.
கலை........ 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
ரா........... 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
கலை....... 现 在 是 下 午 三 点。 சியன் ச்சை ஸ் சியா வூ சான் தியன்
ரா......... 现 在 是 下 午 三 点。 சியன் ச்சை ஸ் சியா வூ சான் தியன் இப்போது நேரம் பிற்பகல் மூன்று மணி.
கலை........ 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
ரா........... 现 在 几 点 了? சியன் ச்சை ஜி தியன் லா
கலை....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் வன் ஷாங், ச்சியூ தியன்
ராஜா....... 现 在 是 晚 上 九 点。 சியன் ச்சை ஸ் வன் ஷாங், ச்சியூ தியன் இப்போது நேரம் இரவு 9 மணி.நேரம்.
கலை.......சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了?
ராஜா.........சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了? தயவு செய்து சொல்ல முடியுமா?இப்போது மணி என்ன?
கலை.....ஷ் தியன் அள்ஷ் பஃன். 十 点 二 十 分。
ராஜா.......ஷ் தியன் அள்ஷ் பஃன். 十 点 二 十 分。 பத்து மணி இருபது நிமிடம்.
கலை.......சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了?
ராஜா.........சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了? தயவு செய்து சொல்ல முடியுமா?இப்போது மணி என்ன?
கலை.....ஷ் தியன் அள்ஷ் பஃன். 十 点 二 十 分。
ராஜா.......ஷ் தியன் அள்ஷ் பஃன். 十 点 二 十 分。 பத்து மணி இருபது நிமிடம்.
கலை.......கடந்த முறை நேரம் பற்றி கற்றுக் கொண்ட சொற்களை நினைவு செய்தோம். இப்போது நேரம் கேட்பதுடன் தொடர்புடைய வேறு சொற்களை கற்றுக் கொள்வோம்.
ராஜா........சரி சொல்லுங்கள்.
கலை.......மணிக்கு இன்னும் பத்து நிமிடம் தேவை என்று கூறும் போது சீன மொழியில் பொதுவாக ஒரு சொல் சொன்னால் போதும்.
ராஜா.......அப்படியா தமிழில் கொஞ்சம் சிக்கலானது. இந்த சொல் என்ன?
கலை.........ஷா 差என்பது இந்த சொல்லின் உச்சரிப்பு.
ராஜா.........ஷா差. இந்த சொல் வாக்கியத்தில் எப்படி பயன்படுத்தப்படுகின்றது?
கலை........வாக்கியத்தில் எப்படி பயன்படுத்துவது பற்றி நாம் வாக்கியத்தில் சேர்த்து பார்க்கலாம்.
ராஜா.......சொல்லுங்கள்.
கலை........两 点 差 十 分 லியங் தியன் ஷா ஷ் பஃன்.
ராஜா................两 点 差 十 分 லியங் தியன் ஷா ஷ் பஃன். இரண்டு மணி ஆவதற்கு இன்னும் பத்து நிமிடம் தேவை.
கலை........十二 点 差 八 分 ஷ்அள் தியன் ஷா பா பஃன்.
ராஜா..........十二 点 差 八 分 ஷ்அள் தியன் ஷா பா பஃன். பன்னிரண்டு மணிக்கு எட்டு நிமிடம் தேவை.
கலை.......இந்த சொல் கற்றுக் கொண்டீர்களா?
ராஜா......கற்றுக் கொண்டேன். அடுத்த எந்த சொல் கற்றுக் கொள்ளமாம்?
கலை........குவை 快 மைன் 慢 இரண்டு சொற்கள் மொத்தமாக சேர்த்துக் கற்றுக் கொள்ளலாம்.
ராஜா.......குவை என்றால் தமிழில் என்ன அர்த்தம்?
கலை......குவை என்றால் தமிழில் வேகமும் விரைவும் என பொருள்படுகின்றது. மைன் என்றால் தமிழில் மெதுவாக என்று பொருள்படுகின்றது.
ராஜா.......நீங்கள் விளக்கிய பின் எனக்கு புரிந்தது. நாம் வாக்கியங்களில் இப்போது கற்றுக் கொண்ட மூன்று சொற்களை பயிற்சி செய்யலாமா?
கலை......தாராளமாக பயிற்சி செய்யலாம்.
ராஜா......சரி வழக்கம் போல நீங்கள் முதலில் கற்பியுங்கள் நான் உங்களை பின்பற்றி கற்றுக் கொள்வேன்.
கலை.......சரி. சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了? ராஜா.........சிங் வென், நின் தெ பியோ ஜி தியன் லா? 请 问 您 的 表 几 点 了 ? தயவு செய்து இப்போது மணி என்ன?
கலை.....வொ தே பியாவ் ஷா ஷ் பஃன் ச்சியூ தியன் 我 的 表 差 十 分 九 点。 ராஜா.........வொ தே பியாவ் ஷா ஷ் பஃன் ச்சியூ தியன் 我 的 表 差 十 分 九 点。 என் கைகடிக்காரத்தை பார்த்தால் இப்போது 9 மணி ஆவதர்கு இன்னும் பத்து நிமிடம் இருக்கிறது.
கலை.......சரி. சிங் வென், நின் தெ பியோ குவை ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 快 几 分 钟?
ராஜா.........சிங் வென், நின் தெ பியோ குவை ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 快 几 分 钟? தயவு செய்து உங்கள் கைகடிக்காரம் எவ்வளவு நிமிடம் வேகமாக ஓடுகின்றது?
கலை........ வொ தே பியாவ் குவை சான் பஃன் ச்சுங். 我 的 表 快 三 分 钟.
ராஜா........ வொ தே பியாவ் குவை சான் பஃன் ச்சுங். 我 的 表 快 三 分 钟. என் கைகடிக்காரம் 3 நிமிடம் வேகமாக ஓடுகின்றது.
கலை....... சிங் வென், நின் தெ பியோ மைன் ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 慢 几 分 钟? கராஜா....... சிங் வென், நின் தெ பியோ மைன் ஜி பஃன் ச்சுங்? 请 问 您 的 表 慢 几 分 钟?
கலை........ வொ தே பியாவ் மைன் சான் பஃன் ச்சுங். 我 的 表 慢 三 分 钟.
ராஜா......... வொ தே பியாவ் மைன் சான் பஃன் ச்சுங். 我 的 表 慢 三 分 钟. என் கைகடிக்காரத்திக்கு மூன்று நிமிடம் மெதுவாக ஓடுகின்றது.
|