• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-09 15:21:30    
சியூ சுய் வீதி என்ற சந்தையின் மாற்றம்

 


cri

புதிய சியூ சுய் வீதி என்ற சந்தை

சுய் வீதிச் சந்தை, சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கின் கிழக்கு சாங் ஆன் வீதியில் அமைந்துள்ளது. இங்கு விற்பனையாகும் சீனத் தனிச்சிறப்புடைய பட்டு ஆடைகள், பல அந்நிய நண்பர்களை ஈர்த்துள்ளன. ஆனால், முன்பு, புகழ்பெற்ற வணிகச் சின்னம் உடைய ஆடைகளின் போலியான மாதிரிகள் சில வணிகர்களால் விற்பனை செய்யப்பட்டமை சில சமயம் காணப்பட்டதுண்டு. இச்சந்தையின் நிர்வாகத் துறை மற்றும் வணிகர்களின் கூட்டு முயற்சியுடன், இந்த நிலைமை முற்று முழுதாக மாறியுள்ளது. தற்போது சந்தையில் விற்பனையாகும் ஆடைகள் எல்லாம், தற்சாப்புடன் தயாரிக்கப்பட்டவை அல்லது விற்பதற்கு உரிமம் பெற்றவை. அண்மையில், ஐரோப்பிய ஒன்றிய வணிகச் சங்கத்தின் அறிவுசார் சொத்துரிமை கமிட்டித் தலைவர் Paul Ranjard இங்குள்ள 40 வணிக நிறுவனங்களுக்கு "அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்கும் முன்னணி நிறுவனம்" என்ற பாராட்டை வழங்கிச் சிறப்பித்தார். இன்று, சியூ சுய் வீதிச் சந்தைக்குச் சென்று பார்ப்போம்.

பழைய சியூ சுய் வீதி என்ற சந்தை

முந்தைய சியூ சுய் வீதிச் சந்தை, முழு நீளம் 300 மீட்டருக்கு குறைவான ஆடைச் சந்தையாக இருந்தது. கடந்த நூற்றாண்டின் 80, 90ஆம் ஆண்டுகளில், பட்டு ஆடை விற்பனைக்கு அது புகழ்பெற்று விளங்கியது. சீனாவிலுள்ள வெளிநாடுகளின் பணியகங்கள் அமையும் பகுதிக்கு அருகில் இருப்பதால், பெய்ஜிங்கிற்கு வருகை தரும் அந்நியர்கள் அங்கே செல்ல விரும்புகின்றனர். ஒரு காலத்தில், புகழ்பெற்ற தொழில் சின்னங்களை விரும்பும் சிலரின் மனநிலையை நிறைவு செய்ய, சில வணிகர்கள் புகழ்பெற்ற வணிகச் சின்னம் உடைய ஆடைகளின் போலியான மாதிரிகளை விற்கத் துவங்கினர். இந்த ஆடைகள், மலிவு விலை என்ற காரணத்தால், சில அந்நியர்களை வாங்க ஈர்த்தன.

முறையான வணிகச் சின்னங்களையும் நுகர்வோரின் உரிமை மற்றும் நலனையும் பாதுகாக்க, சியூ சுய் வீதிச் சந்தையின் நிர்வாகத் துறை சந்தை அலுவலுக்கான மேலாண்மையை வலுப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற வணிகச் சின்னம் உடைய ஆடைகளின் போலியான மாதிரிகளை விற்பது, அறிவுசார் சொத்துரிமையை மீறிய செயலாகும் என்று வணிகர்கள் அறிந்து கொண்டுள்ளனர். மேலும், இச்சந்தையின் சீரமைப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. 1000க்கும் மேலான வணிகர்கள் 7 மாடிகள் கொண்ட புதிய கட்டிடங்களில் இடம் பெயர்ந்துள்ளனர். ஹுவா சி ஜுன் என்பவர், இச்சந்தையில் வியாபாரம் செய்யும் பழைய வணிகர் ஆவார். முன்பு, அவர் போலியான பொருட்களை விற்பனை செய்தார். ஆனால் தற்போது, வணிகச் சின்னம் உடைய ஆடைகளை விற்க உரிமம் பெற்றார். இது மட்டுமல்ல, தரச்சான்றிதழ் பெற்ற பொருட்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு அவர் முன்முயற்சியுடன் வழிகாட்டுகிறார்.

"முன்பு போலியான பொருட்களை நான் முக்கியமாக விற்பனை செய்தேன். தற்போது முந்தைய சிந்தனையை மாற்றியுள்ளோம். இங்கே வந்த அந்நியர்கள் அதிகம். ஆனால் தற்போது அவர்கள் பாரம்பரியக் கருத்துக்கிணங்க செயல்படுகின்றனர். அதாவது, போலியான பொருட்களை வாங்க சியூ சுய் வீதிச் சந்தைக்குச் செல்கின்றனர். அவர்களின் இந்தக் கருத்தை மாற்ற வேண்டும். இந்தத் துறையிலான பணியை நாம் செவ்வனே செய்துள்ளோம்" என்றார் அவர்.

திரு ஹுவானின் ஆடைக் கடையைத் தவிர, முன்பு போலியான பொருட்களை விற்பனை செய்த வணிகர்கள் பலரும், தற்போது தரச்சான்றிதழ் பெற்ற ஆடைகளை விற்கின்றனர்.