• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-09 15:38:18    
சோப்பு 2

cri

"அம்மா, நான் இதைப் பார்க்கலாமா" என்று மூத்தமகள் ஸியூ கையை நீட்டிய போது, வெளியே விளையாடிக் கொண்டிருந்த இளையமகள் சாவோவும் ஓடி வந்தாள். இருவரையும் ஸு மினின் மனைவி ஒதுக்கித் தள்ளிவிட்டு, சோப்பை பழையபடி உறையில் சுற்றி அலமாரியின் மேல்தட்டில் வைத்தாள். திரும்பவும் ஒருமுறை அதை எடுத்துப் பார்த்த பிறகு, பழையபடி காகிதப்பணம் ஒட்டும் வேலையைச் செய்யத் தொடங்கினாள்.

"ஸுவே செங்" எதையோ நினைத்துக் கொண்டது போல உரக்க கத்தி அழைத்தான் நாற்காலியில் உட்கார்ந்த ஸு மின். அவனுக்கு எதிரே அமர்நந்திருந்த அவனுடைய மனைவியும், "ஸுவெ செங்" என்று கூப்பிட்டாள்.

காகிதப்பணம் ஒட்டுவதை நிறுத்திவிட்டு ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று உற்றுக் கேட்டாள். ஒரு அரவமும் இல்லை. கணவன் பொறுமை இழந்துவிட்டாதைக் கண்ட அவள் வருத்தத்துடன், "ஸுவெ செங்" என்று உரக்க கீச்சுக் குரலில் கத்தினாள்.
இந்த அழைப்புக்கு பலனிருந்தது. மூச்சிறைக்க ஓடி வந்து நின்றான் ஸுவெ செங். அவனுடைய வட்டமுகம் வியர்வையில் பளபளத்தது.

"என்ன பண்ணிக்கிட்டு இருந்தே" எரிச்சலோடு கேட்டாள். "அப்பா கூப்பிட்டது காதுல விழலையா?"

"நான் குத்துச் சண்டை பயிற்சி எடுத்துக் கிட்டிருந்தேன்." உடனே தந்தையின் பக்கம் திரும்பி, "என்ன செய்யணும்" என்பது போல அவரைப் பார்த்தான்.

"ஸுவெ செங், ஒடுஃபுன்னா என்ன? எனக்கு அர்த்தம் தெரியணும்."

"ஒடுஃபு? பயங்கரமான பெண்ணா?"

"முட்டாள்தனமா உனறாதே. நான் என்ன பொம்பளையா? சொல்லு."

ஸுவெ செங் இரண்டு எட்டு பின்னால் எடுத்து வைத்து விறைப்பாக நின்றான். தன்னுடைய தந்தையின் கம்பீரம் சில சமயங்களில் பீகிங் ஆப்பராவில் முதியவர்கள் நடப்பதை நினைவூட்டும். ஒரு போதும் அவரை ஒரு பெண்ணாக நினைத்துப் பார்க்கத் தோன்றியதில்லை. தான் சொன்னபதில் பெரியதவறு என்பதைப் புரிந்து கொண்டான்.

"ஒ-டு-பு-ன்னா பயங்கரமான பொம்பளைன்னு எனக்குத் தெரியாதா? உங்கிட்டே கேக்கணுமா? இது சீன மொழி இல்லை. வேற ஏதோ அன்னிய பிசாசு மொழி. இதுக்கு என்ன அர்த்தம்? உனக்குத் தெரியுமா, தெரியாதா?"

"எனக்கு... எனக்கு தெரியாது" ஸுவெ செங் சங்கடத்தில் நெளிந்தான்.

"ப்பூ! இவ்வளவு செலவழிச்சு உன்னை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி என்ன பிரயோஜனம்? இந்த சின்ன விஷயம் கூட தெரியலையே. பேசுறதுக்கும், புரிஞ்சுக்கறதுக்கும் சொல்லித்தரதா உன் பள்ளிக்கூடம் பீத்திக்கிடுது. உனக்கு எதுவுமே சொல்லித் தரலை. இந்தப் பிசாசு மொழியைப் பேசுனவங்களுக்கு பதினாலு, பதினஞ்சு வயசுதான் இருக்கும். உன்னைவிட சின்னப் பசங்க. எவ்வளவு நல்லாப் பேசுறாங்க. உனக்கே அர்த்தம் கூடத் தெரியலை. எனக்குத் தெரியாதுன்னு எந்த மூஞ்சியை வச்சுக்கிட்டுச் சொல்ற? போ, போய் உடனே அர்த்தம் தேடு."

"சரி" ஸுவெ செங் பதிலை மென்று விழுங்கியபடியே, மரியாதையாகப் பின்வாங்கிச் சென்றான்.