வட கிழக்கு சீனாவின் Ji Lin மாநிலத்தின் Chang Chun நகரில், Tu Men Jiang ஆற்றுப் பிரதேசத்தின் சர்வதேச ஒத்துழைப்பு வளர்ச்சி பற்றிய நிபுணர்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. வன வளம், வேளாண்மை, மீன்பிடித்தொழில், இரும்பற்ற உலோகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ரஷியாவுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, இப்பிரதேசத்தின் வளர்ச்சியைக் கூட்டாக தூண்டும் என்று Ji Lin மாநிலம் அறிவித்தது. சீனா, ரஷியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் Tu Men Jiang ஆற்றுப் பிரதேசம் அமைந்துள்ளது. ரஷியாவின் சந்தைத் தேவைக்கு ஏற்ற தானியம், காய்கறி வகைகள், நீர்வாழ்வன, உள்ளூர் பொருட்கள் ஆகியவற்றை முக்கியமாக வளர்த்து, ரஷியாவின் பெரிய ரக மீன் பதனீட்டுத் தொழில் நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு, ரஷியாவின் சுரங்கங்களில் ஏலம் விடும் முறை மூலம் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து, ரஷியாவின் சுற்றுலா நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை Ji Lin மாநிலம் வலுப்படுத்தும் என்று இம்மாநிலத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
|