• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-10 14:55:39    
சீனாவில், பங்குப் பேரத்தில் 9 கோடி மக்கள்

cri

ஏப்ரல் 18ஆம் நாளன்று, சீனாவின் பங்குச் சந்தையில் புதிதாக அதிகரித்த A பங்குக் கணக்குகளின் எண்ணிக்கை, 2 லட்சத்து 75 ஆயிரத்து 100 ஆகும். இது அண்மைக்காலத்தில் பதிவான அன்றாட பங்குக் கணக்குகளில் மிகக் கூடுதலானது. இது வரை, சீனாவில் A பங்குக் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை,9 கோடியை விஞ்சியுள்ளது. கடந்த ஆண்டு முதல், சீனாவின் பங்குச்சந்தைப் பேரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பலர் பங்குப் பேரத்தில் ஈடுபட்டுப் பணம் ஈட்டுகின்றனர்.

A பங்கானது, சீனப் பணமான ரென் மின் பியால் கணக்கிட்டுப் பேரத்தில் ஈடுபடும் பங்குப்பத்திரமாகும். பங்குகளின் குறியீட்டு எண் ஏறி வருவதால், பெரும்பாலான பங்குகளின் விலை மலிவில்லாமல் போய் விட்டது. ஆகவே, முதலீட்டாளர்கள் முதலீட்டு இடர்ப்பாட்டைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

1900ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் லண்டனிலுள்ள ஒரு இத்தாலிய உணவு விடுதியில், 1900 ஆண்டுகளுக்கு முந்தைய ஓவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தில் தங்க நிற இறக்கை மயிலும் திராட்சைப் பழமும் வரையப்பட்டன. பணக்கார ரோமர் ஒருவரின் இல்லத்திற்கென்று தீட்டப்பட்ட இவ்வோவியம், புகழ்மிக்க ரோம்- லண்டன் பகுதியின் லேம் வீதியில் கணடறியப்பட்டது. மிகத் தரமான இவ்வோவியத்தை நிபுணர்களும் வெகுவாகப் பாராட்டுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் மகிழ்ச்சியூட்டத் தக்க முக்கிய கண்டுபிடிப்பு இதுவாகும் என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். லண்டன் தொல் பொருளியல் என்ற இதழில் இக்கண்டுபிடிப்பு வெளியிடப் படுமாம்.

எழுத்தாக்கத் திறனைப் பாதிக்கும்

குறுந் தகவல்கள்

அயர்லாந்து நாட்டில், இளைஞர்கள் செல்லிடபேசி மூலம் குறுந் தகவல்களை அனுப்புவதில் பேரார்வம் காட்டி வருகிறார்கள். இதனால் அவர்களுடைய ஆங்கிலச் சொற்களின் எழுத்தாக்கத் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அயர்லாந்து கல்வியமைச்சகம் ஏப்ரல் 25ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. நாடு தழுவிய நிலையில் 15, 16 வயதுக்குட்பட்ட 37 ஆயிரம் மாணவர்களின் ஆங்கில மொழித் திறன் தொடர்பான தேர்வை நடத்தியதை அடுத்து, அயர்லாந்து கல்வியமைச்சகம் இவ்வறிக்கையை வெளியிட்டிருப்பது அறியத்தக்கது.

குறுந் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது, எழுத்து எழுத்தாக எழுதிச் சொற்களை ஆக்குவதில் மாணவர்கள் தேர்ச்சி பெறத் தவறியமைக்கும் சீரற்ற மொழி நடைக்கும் வழிகோலியுள்ளது என்று தேர்வுக் குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறு சிறு வாக்கியங்கள், எளிய காலங்கள், குறிப்பிட்ட சில சொற்தொடர்கள் ஆகியவற்றை மாணவர்கள் அளவுக்கு மீறிப் பயன்படுத்துகிறார்கள் என்று அறிக்கை தெரிவித்தது.

அமெரிக்காவில், குழந்தைகளுக்கான புதிய சத்துணவு வரையறை

குழந்தைகளின் உடல் பருமன், உலகளாவிய சமூகப் பிரச்சினையாக விளங்கியுள்ளது. இதை ஒட்டி, அமெரிக்க மருத்துவக் கல்லூரியைச்சேர்ந்த ஆய்வகம் ஏப்ரல் 25ஆம் நாள், குழந்தைகளுக்கான புதிய சத்துணவு வரையறையை வெளியிட்டுள்ளது. பெருமளவு சர்க்கரையும் உப்பும் கொண்ட உணவுப் பொருட்களுக்குப் பதிலாக, பழ வகைகளையும் காட்டுக் காய்கறிகளையும் உண்ணுமாறு பள்ளி மாணவர்களிடம் அது முன்மொழிந்துள்ளது. பிஸ்கோத்து, இனிப்பு வகை, மிட்டாய், விரைவு உணவு ஆகியவை உட்பட, அதிக அளவு கொழுப்புடன் கூடிய உணவுப் பொருட்களை மாணவர்களுக்குப் பள்ளிகள் வழங்குவது குறித்து, அமெரிக்க நாடாளுமன்றம் விடுத்த கோரிக்கையின் பேரில் இப்புதிய வரையறை அறிவிக்கப்பட்டது.

ஆப்பிள், உலர்ந்த திராட்சை, கேரட் பிஸ்கோத்து போன்றவற்றை அதிக அளவில் உண்ணுமாறு இந்த வரையயறை பரிந்துரை செய்துள்ளது. கோதுமை மாத் துண்டுகள், நீர், தயிர், கொழுப்பு குறைந்த பால் முதலியவை, நல்ல காலை உணவுப்பொருட்களாகும் என்றும் அது முன்மொழிந்துள்ளது.