• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-10 15:19:01    
சீன இந்திய நட்புறவு ஆண்டு
செல்லூர் நா.சீனிவாசன் அனுப்பிய கட்டுரை

cri

பஞ்சசீல கொள்கைகளை கட்டிக்காப்பதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டு இந்திய சீன நட்புறவே அவற்றை பேணிகாத்திடும். இரு நாட்டு நண்பர்களாகிய நாம் அந்நட்புறவை தக்கவைத்திட என்ன செய்யலாம்? என்ன செய்ய முடியும்?என்பதை இக்கட்டுரையின் மூலம் விரிவாகக் காணலாம்.

வான்புகழ் வள்ளுவனின் பொ ன்னான திருக்குறளின் வரிகளும் இராமாயணம், மகாபாரதம் போன்ற பாரதத்தின் பண்பாட்டை எடுத்துக் காட்டும் இதிகாசங்களின் வரிகளையும், நட்புணர்வோடு மொழிபெயர்த்து வெளியிட்டு, உலக நாடுகளில் உள்ள எ ழுத்தாளர்களின் கவனத்தை எல்லாம் தனது பக்கம் திசை திருப்பிய பெருமை சீனாவை மட்டுமே சாரும். இதன் பிரதிபலனாக சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக் கழகமும் தனது கல்வி பரிமாற்ற பணிகளுக்காக சீனாவில் உள்ள பத்துக்கும் மேற்பட் பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்படக் கூடிய வகையில் ஒப்பந்தம் ஒன்றை அண்மையில் நிறைவேற்றி உள்ளன. இதன் மூலம் இனிவரும் நாட்களில் சீன மாணவர்கள் தமிழகம் வ ந்தும் தமிழக மாணவர்கள் சீனா சென்றும் தனது கல்வி அறிவை வானுயர வளர்த்து கொள்ள முடியும் என்பதில் எள்ளள வும் ஐயம் இல்லை.

 

கல்வித் துறை மூலம் மட்டுமே இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு கிடைக்கக் கூடிய சூழலில் இரு நாட்டு நட்புறவானது மேலும் மேலும் பலப்படுமா?வளம் பெறுமா?என்பது நிச்சயம் ஒரு கேள்வி குறிததான். இக்கேள்விக்கு விடை காண்பதும் எளிதான ஒன்று தான். ஆம் விளையாட்டு, வர்த்தகம், விவசாயம் போன்ற மூன்று முக்கிய துறைகளிலும் இது போன்ற பரிமாற்ற ஒப்பந்தம் ஒன்று நடைமுறைக்கு வரும் என்றால், இரு நாட்டு நட்புறவு எனும் மரம் வேர்விட்டு வளர, இங்கு யாரும் நீர் ஊற்ற வே ண்டிய அவசியமே இல்லை.

இதில் கவனிக்க தக்க முக்கிய அம்சம் என்னவென்றால் இந்திய பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே உள்ள பகைமை உணர்வை முறியடிக்கும் திறன் விளையாட்டுத் துறைக்கு உள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இரு நாட்டின் கிரிக்கெட் அணிகளும் களமிறங்கி விளையாட தொடங்கி விட்டால் போதும். அங்கே சகோதர உணர்வும் சமத்துவ உணர்வும் அமைதி உணர்வும் கை கோர்த்து களிநடனம் புரிவதை விளையாட்டு ரசிகர்கள் நிச்சயம் கண் கூடாக காண்பார்கள். இரு நாட்டு மக்களின் கவனமும் விளையாட்டின் மீது திசை திரும்பிடும் போது அங்கே பகை உணர்வு மறந்து நட்புறவுக்கான விதை விதைக்கப்படுகின்றது. சகோதர உணர்வையும் அமைதி மனப் போக்கையும் உருவாக்கக் கூடிய சக்தி விளையாட்டுத் துறைக்கு உள்ளதை பயன்படுத்திக் கொண்டு இந்திய சீன நட்புறவை நாம் ஏன் பலப்படுத்தக் கூடாது?வளப்படுத்த கூடாது?

துணிந்து செயல்படக் கூடிய எண்ணம் உருவாகி விட்டால் போதும். வானம் கூட தொட்டு விடும் தூரம் தான்.

விளையாட்டின் மூலம் மலரக் கூடிய நட்புறவு நிலையானதாக இருக்குமா?என்று ஒரு சிலர் விளையாட்டாக ஒரு வினாவை தொடுக்கலாம். எதையும் அறிவு பூர்வமாக ஆராய்ந்து பார்ப்பதை விட அனுபவ பூர்வமாக அதை ஆராய்ந்து பார்த்தால் தான் கிடைக்கக் கூடிய பலன்களும் பலமானதாக இருக்கும். எனவே இரு நாட்டு விளையாட்டு அணிகளும் போட்டிகளில் இனி அடிக்கடி பங்கேற்பதன் மூலம் இந்திய சீன நட்புறவை அவ் வப்போது புதுப்பித்துக் கொள்ளலாம். ஆம் புதியதோர் பார்வையும் புதியதோர் அணுகுமுறையும் இணைந்து விட்டால் வெற்றியின் எல்லை வெகு அருகில் தான். எனவே இரு நாட்டு விளையாட்டு அணிகளையும் களத்தில் இறக்கி விட்டு பார்வையாளர்களின் கொத்தளத்தில் இருந்து நாம் நட்புறவு எனும் வெற்றிக் கனியை மகிழ்வுடன் அறுவடை செய்வோம். அதை நட்புணர்வுடன் ஆழமாக்குவோம். வெறும் நட்பால் எதையும் சாதிக்க முடியாது என்பது எங்களின் ஆழமான எண்ணம். எனவே அந்த நட்புக்குள் சகோதர உறவென்னும் வித்தினை விதைத்துவிட்டால் மலரக் கூடிய நட்புறவின் மூலம் எதையும் சாதிப்போம். இருநாட்டு நட்புறவின் அணுகுமுறையையும் நவீனமாக்குவோம்.

வாழ்க இந்திய சீன நட்புறவு. வளர்க இந்திய சீன நட்புணர்வு.