• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-11 15:52:16    
புல்வெளி ஆயர் வாழ்க்கை

cri

வடக்குச் சீனாவின் உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசம், பரந்த இயற்கையான புல்வெளிகளால் புகழ் பெற்றுள்ளது. புல்வெளியில் வாழும் மங்கோலிய இன ஆயர்கள், முன்பு, கூடாரங்களில் வசித்தனர். ஆடுமாடுகளை மேய்த்தனர். நீர்புனலை நாடி வாழ்ந்தனர். இன்றோ, உளமங்கோலிய பரந்த புல்வெளியின் ஆயர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது? இன்றைய நிகழ்ச்சியில், எமது செய்தியாளருடன் உள்மங்கோலியாவின் வடக்கு பகுதியிலான உசுமுசின் புல்வெளியின் ஆயர்களின் வாழ்க்கை பற்றி அறியச் செல்வோம்.

உசுமுசின் புல்வெளி உள்மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் மங்கோலிய இனப் பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டுள்ள மண்டலமாகும். இங்கு, எழிலான இயற்கைக் காட்சிகளும், பரந்த புல்வெளிகளும் உள்ளன. எனவே, சீனாவின் முக்கியமான கால் நடை வளர்ச்சி உற்பத்தித் தளங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. அங்குள்ள உசுமுசின் ஆடுகள், மத்தியக் கிழக்கு நாடுகளால் வரவேற்கப்படுகின்றன. ஆண்டுதோறும், பெரும் எண்ணிக்கையிலான உயிருள்ள ஆடுகள், மாடுகள் மற்றும் அவற்றின் இறைச்சி வகைகள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனையாகின்றன.

முன்பு, ஆயர்கள், சிதறிக்கிடக்கும் முறையில் ஆடுமாடுகளை மேய்த்தனர். "கால நிலையைச் சார்ந்து, நீர்புனலை நாடி வாழும்" கால் நடை வளர்ச்சி என்ற தொழில் மாதிரியை இன்று ஆயர்கள் படிப்படியாக மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். மங்கோலிய இனத்தின் பண்டைக்கால மேய்ச்சல் வடிவில் நவீன அறிவியல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உசுமுசின் மாவட்டத்தின் பையின்ஹோபூர் கிராமத்தில் மேய்ச்சலில் தேர்ச்சி பெற்ற வல்லுநர் புகுபயர் என்பவர் இருக்கின்றார். அறிவியல் முறையிலான மேய்ச்சலினால், தமது குடும்பத்தின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. அன்றி, வாழ்க்கையை அனுபவிக்க, மேலதிகமான நேரமும் மிஞ்சியுள்ளது என்று அவர் கூறினார். தாம் மிகவும் விரும்பும் மங்கோலிய மல்யுத்த விளையாட்டில் அடிக்கடி ஈடுபடுவது தவிர, மாவட்ட ரீதியான ஆயர் சோதனைக் குழுவிலும் அவர் பங்கெடுத்துள்ளார். சொந்த செலவில் கனேடிய நாட்டின் கால் நடை வளர்ச்சி மேம்பாடுடைய பிரதேசத்திலும் சுற்றுலா சென்றார்.

"கனாடாவில் பத்து மேய்ச்சல் பண்ணைகளில் பார்வையிட்டோம். அங்கு கால் நடை வளர்ச்சி மிகவும் முன்னேறியது. உண்மையிலேயே இது எனக்கு கண்களுக்கு விருந்தாக இருந்தது. அங்கு, பெருமளவிலான நவீன மேய்ச்சல் பண்ணைகள், நன்றாக பாதுகாக்கப்பட்டுள்ள இயற்கைச்சூழல், இனப்பெருக்கம், விற்பனை, பதனீடு ஆகியவை படைத்த கால் நடை வளர்ச்சிப் பொருளாதார முறைமையை பார்த்தோம். பாரம்பரிய மேய்ச்சல் முறையை மாற்றி, முன்னேறிய நிர்வாக மாதிரியை உட்புகுத்தி, கால் நடை வளர்ச்சி தொழிலை வளர்க்க வேண்டும்" என்றார்.

உசுமுசின் புல்வெளியில் ஆயர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது, புதிய விஷயமல்ல, 9 ஆண்டுகளுக்கு முன்பே, புகுபயர், மாவட்டத்தின் ஆயர் சோதனைக்குழுவுடன் ஆஸ்திரேலியா சென்று பார்வையிட்டு கற்று வந்தார். அங்கு பிரதேசங்களைப் பிரித்தறுத்து மாறிமாறி மேய்ச்சல் செய்வது அவரது மனதில் ஆழப்பதிந்துள்ளது. ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பிய பின், அவர், தம் குடும்பத்தின் 600 ஹேக்டருக்கு மேலான புல்பரப்பை, எட்டு பிரிவுகளாக பிரித்தறுத்தார். வேறுபட்ட புல்தரையில் மாறிமாறி மேய்ச்சல் முறை மேற்கொள்ளப்பட்டது. அதே வேளையில், உகந்த முறையில் ஆடுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, தரமான இன வகை மாடுகளை உட்புகுத்தினார். கால் நடைகளின் எண்ணிக்கை குறைந்ததால், உழைப்புச் சக்தியும், தீனியும் குறைந்தன. இதனால், செலவு சிக்கனமாகி, வருமானம் அதிகமாகியுள்ளது. இப்போது ஆண்டுக்கு புகுபயர் ஒரு லட்சத்துக்கும் அதிகமான யுவான் வருமானம் பெற்றுள்ளார்.

புதிய மேய்ச்சல் முறையையும் நிர்வாக வடிவத்தையும் பயன்படுத்தும் புகுபயர் போலவே, உசுமுசின் புல்வெளியில் இன்னும் பலர் இருக்கின்றனர்.

உசுமுசின் புல்வெளியில், அறிவியல் முறையிலான நிர்வாகம், இயந்திரமயமாக்க உற்பத்தி முதலியவற்றை, மென்மேலும் அதிகமான ஆயர்கள் கடைப்பிடிக்கின்றனர். இப்போது, பிரதேசத்தை பிரித்தறுத்து மாறிமாறி மேய்ச்சல் செய்வது, கால்நடைகளுக்கான மருந்து சேர்ந்த குளியல் தொட்டி, வீடுகளுக்கு முன்னும் பின்னும் உள்ள புல் வெட்டும் இயந்திரம் எல்லாம் காணப்படுகின்றன.

உசுமுசின் புல்வெளியில் குளிர்காலத்தில் சூறாவளியும் உறைபனி புயலும் ஏற்படுவதால் கால்நடை வளர்ச்சிப் பிரதேசங்களில் இன்னல் மிகுந்த காலமாகும். இக்காலத்தில் ஆயர்கள், கால்நடைகளைப் பாதுகாக்க, இயற்கைச் சீற்றங்களை எதிர்த்து போரிடுவார்கள். ஆனால், இப்போது, கடும் குளிர்காலத்தில் இணக்கமான சுமுகமான சூழ்நிலை ஆயர்களின் வீடுகளில் நிலவுகிறது. மந்துஹுபெரிக் கிராமம், அதிகமான மக்கள் தொகையுடைய ஒரு கிராமம். நூற்றுக்கும் அதிகமான மங்கோலிய இன ஆயர் குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. கிராமத் தலைவர் சுயிர பாட்டல் பேசுகையில்,

"பிரதேசங்களைப் பிரித்தறுத்து மாறிமாறி மேய்ச்சல் செய்வதினால், புல்பண்ணைகளில் மீட்சி காணப்பட்டுள்ளது. இயல்பான உயிரின வாழ்க்கைச் சூழல் சமநிலையில் உள்ளது. ஆயர்களின் வருமானமும் உயர்ந்துள்ளது. எங்கள் கிராமத்தில் 80 விழுக்காட்டுக்கும் மேலான ஆயர்கள், நிரந்தரமான, கால்நடை வளர்ச்சிக்கான தொழுவங்களைக் கட்டியமைத்துள்ளனர். உறைபனி அழிவினால் அவர்களின் கால் நடைகள் பாதிக்கப்படாது. ஆயர் குடும்பங்களில் காற்று ஆற்றல் மின்னாச்சி இயந்திரமும் தொலைபேசியும் காணப்படுகின்றன. ஆயர்கள் அறிவியல் முறையில் கால் நடைகளை வளர்த்து, உற்பத்தியை அதிகரித்து, வருமானத்தை உயர்த்துவதில் நான் முன்நிற்க வேண்டும்" என்றார், அவர்.