• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-11 16:01:28    
ஒலிம்பிக் நீர் பூங்கா

cri

பசுமையான, தூய்மையான நீரூற்றின் குளிர்மையை, அனுபவிக்க நீங்கள் விரும்பினால், பெய்ஜிங்கின் சுன்யி பிரதேசத்திலுள்ள ஒலிம்பிக் நீர் பூங்கா, செல்லத்தக்க இடமாகும்.

ஒலிம்பிக் நீர் பூங்காவில், 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் படகுப் போட்டி வகைகளான rowing, canoe, நீச்சல் மராதன் மற்றும் ஊனமுற்றோர் ஒலிம்பிக் போட்டியின் படகு போட்டி ஆகியவை நடைபெறும். இப்போது இது முனைப்பாக கட்டியமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. 2008ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் 32 தங்க பதக்கங்கள் இப்பூங்காவில் நிர்ணயிக்கப்படும். இந்த தங்கப்பதக்கங்கள் மொத்த தங்கப்பதக்க எண்ணிக்கையில் 10 விழுக்காடு ஆகும். பெய்ஜிங் நகரத்தின் மையப்பகுதியிலிருந்து ஒலிம்பிக் நீர் பூங்காவை அடைய 30 நிமிடம் தேவை.

ஒலிம்பிக் நீர் பூங்காவின் நிரந்தர பரப்பளவு, 18 ஆயிரம் சதுரமீட்டர், தற்காலிக பரப்பளவு, 14 ஆயிரம் சதுரமீட்டர். நீர் பரப்பு 5 லட்சத்து, 50 ஆயிரம் சதுரமீட்டர்.

தற்போது, ஒலிம்பிக் நீர் பூங்காவின் முக்கிய விளையாட்டுக்களரியின் திட்டப்பணி அடிப்படையில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் நாள் முதல், 11ம் நாள் வரை உலக இளைஞர் சாம்பியன்பட்ட படகு போட்டி இங்கு நடைபெறும்.