தைவான் நீரிணையின் இரு கரை பொருளாதார வர்த்தக தொடர்பு மென்மேலும் வளர்ச்சியடைவதோடு பண்பாட்டு தொடர்பும் ஒத்துழைப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இன்றைய சீன மகளிர் நிகழ்ச்சியில் சீன பெரு நிலப் பகுதியில் வாழ்கின்ற யூ வட்டார இசை நாடக கலைஞர் மாச்சிங் வூ அம்மையாரின் தைவானுடனான தொடர்பை அறிமுகப்படுத்துகிறோம்.
யூ வட்டார இசை நாடகம், ஹெர்னான் மாநிலத்தின் ஒரு உள்ளூர் இசை நாடகமாகும். அதன் இசை அழகாக இருக்கிறது. மொழி இனிமையானது வாழ்க்கையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது எனவே, பலர் இந்த இசை நாடகத்தால் ஈர்க்கப்படுகின்றனர். ஹெர்நான் மாநிலத்தின் ரோ யான் நகரின் யூ வட்டார இசை நாடக குழுவின் தலைவராக மா ச்சிங் வூ அம்மையார் ஆவார், இவ்வாண்டு அவருக்கு 84 வயதாகும். இவர் வாழ்நாள் முழுவதற்குமான முழு வாழ்க்கையின் தலைசிறந்த கலைச் சாதனை என்னும் பரிசை பெற்றவரும் ஆவார். இம்முதியவர் தனது மணிக்கட்டில், தனிச்சிறப்பு ஏதும் இல்லைத எளிய கைக்கடிகாரத்தை கடந்த 9 ஆண்டுகளாக அணிந்து வருகிறார். இது வரை அதை மாற்றவில்லை. இந்த கைக்கடிகாரம் பார்க்கும் போது, தைவானிலுள்ள ஒரு மாணவியை நினைக்கிறேன். என்னுடைய மகளும், மகனும் எனக்கு நல்ல கைகடிகாரம் அன்பளிப்பாக வழங்க வேண்டும். நான் மாற வேண்டாம். நாள்தோறும் இந்த கைகடிகாரம் என்னுடன் இருந்து வருகிறது என்றார் அவர். தைவானில் அதிகமான ரசிகர்கள் அவருக்கு உண்டு. அவர்களில் ஒரு மாணவியை அவர் மிகவும் விரும்புகிறாற் என்று மா ச்சிங் வூ அம்மையாரை நன்றாக அறிந்து க் கொண்டவர்களுக்கு தெரியும். மா ச்சிங் வூயின் தைவான் உணர்வு, அவர் பல முறையாக தைவானில் மேற்கொண்ட பயணங்களோடு தொடர்புடையது.
தைவானிலுள்ள ஹெர்னான் சக கிராமவாசிகள் சங்கத்தில் திரு சாங் தியே யூ, யூ இசை நாடகத்தின் ஒரு ரசிகர் ஆவார், பல ஆண்டுகளுக்கு முன், அவர் மாச்சிங் ஆவிற்கு அழைப்பு விடுத்தார், அதே வேளையில் தைவான் கு குவாங் நாடக குழுவின் யூ இசை கிளை, மாச்சிங்வூயின் வருகையை வரவேற்றது. எனவே, 1993ம் ஆண்டு மா ச்சிங் வூ தைவானுக்கு முதன் முறையாக சென்றார். அவருடைய பிரதிநிதித்துவம் வாய்ந்த யூ வட்டார இசை நாடகமான மூ குய் யின்னை அவர் அரங்கேற்றினார். பண்டைய சீனாவில் மூ குய் யின் என்ற பெண்மணி படை வீரராக, படையுடன் சேர்ந்து எதிரிகளை தாக்குதல் தொடுத்த கதையை, இந்த இசை நாடகம் அரங்கேற்றியது.
|