தொடர்புடைய திட்டத்தின் படி, 2015ம் ஆண்டு வரை, பீடபூமி இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு, திபெத் 2900 கோடி யுவானை ஒதுக்கவுள்ளது என்று, திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகத்தின் தலைவர் ZHANG YONG ZE கூறினார்.
இன்று லாசாவில் எமது செய்தியாளருக்கு அவர் பேட்டி அளித்தார். திபெத்தின் பீடபூமி இயற்கைச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் திட்டப்பணி என்னும் திட்டத்தில், திபெத் வட்டாரத்தின் புல்தரை பாதுகாப்பு, வனப் பிரதேசப் பாதுகாப்பு, நீர் மண் வளப் பாதுகாப்பு, ஆறுகளின் ஊற்று மூலப் பிரதேசங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாற்று எரியாற்றல் முதலியவை இடம்பெறுகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
|