• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-15 17:46:27    
இராமசாமி

cri

உழைக்கும் தொழிலாளார்களின் உரிமை குரல் ஒலித்த நாள் மே தினம். உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள். இந்த வரலாற்று சிறப்புமிக்க மே தின கொண்டாட்டதிற்கு எனது மனமார்த்த வாழ்த்துகள். தொழிலாளர்கள் ஒற்றுமை ஓங்குக. கலை......... திருச்சி அண்ணா நகர் வி.டி.இரவிச்சந்திரனின் கருத்து.
சீனத் தலைமை அமைச்சர் அவர்தம் தென்கொரியப் பயணத்தில் ஆற்றிய முக்கிய சொற்பொழிவின் வாயிலாக உலகம் மற்றும் வட்டார சமாதானத்தை பேணிக் காக்க சீனா தொடர்ந்து பாடுபடும் என்பதை மீண்டும் உலகுக்கு உணர்த்தியுள்ளார் சீனத் தலைமை அமைச்சர். சீன தென்கொரிய பரிமாற்ற ஆண்டில் இந்த பயணம் மேலும் பல நன்மைகளை கொண்டு வரும் என்பது உண்மை. எரியாற்றல் மற்றும் ஏனைய துறைகளின் கூட்டு ஒத்துழைப்புக்கு புதிய உடன்பாடு கண்டிருப்பது இரு நாட்டுறவினை தொடர்ந்து ஆழமாக வளர்க்க வழிவகுக்கும்.


கலைமகள்............. பெருந்துறை பல்லவி கே பரமசிவன்
ஏப்ரல் 19ம் நாள் ஒலிபரப்பிய நிகழ்ச்சியில் மீண்டும் கூட்டப்பட்டுள்ள சீனத் தொடர் வண்டியின் வேகம் என்ற செய்தி தொகுப்பு கேட்டேன். மணிக்கு 200 கிலோ மீட்டர் துரத்தை கடக்கும் வேகத்தில் இந்த தொடர் வண்டிகள் செல்லும் என்பதை அறிந்தேன். இது சீனாவின் இருப்புப் பாதை துறையின் வளர்ச்சியை காட்டுகிறது என்று கூறுகின்றார்.
கலை..............மதுரை -20 ஆர்.அமுதாராணி இது பற்றி தெரிவித்த கருத்து.
சீனாவில் தொடர்வண்டியின் வேகம் அதிகரிப்பது பொது மக்களுக்கு நன்மை. பன்நோக்கு போக்குவரத்து முறைமை வளர்ச்சியடையும். சீன ரெயில்வே வேகம் உலக தரத்தை நோக்கி முன்னேறி வருகிறது என்று கூறலாம்.

 
கலைமகள்........பாண்டிச்சேரி என்.பாலகுமார்
சீன பண்பாடு – வசந்த விழா கொண்டாடப்படும் முன்னும், பின்னும் எப்படி இருக்கிறார்கள் என்பதையும், விழாவின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தியது இந்த நிகழ்ச்சி. சீனாவின் வசந்த விழாவின் முதல் அனுபவத்தில் உள்ள திரு.கிளீட்டஸ் அவர்கள் வழங்கியது சிறப்பு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள், அனுபவித்த சுவையை வார்த்தையில் வெளிபடுத்தினார். பாராட்டுகள்.
கலை...... மதுரை-20என்.இராமசாமி
பின் தக்கிய கிராம மருத்துவ நிலைமையை மாற்றும் பொருட்டு கிராம சுகாதார சாதனங்களின் கட்டுமானத்திற்கு அடுத்த 5ஆண்டுகளில் 3000கோடி யுவான் முத்லிடு செய்ய சீன அரசு திட்டமிட்டு உள்ளது. இது சீனாவில் கிராம மக்களின் மருத்துவ நிலைமையை சீர் செய்ய சீன அரசு எடுத்துக் கொண்ட நடவடிக்கையை கோடிட்டுக் காட்டுகிறது . இது சீனாவில் கிராமங்களை நவீனமயமாக்கும் திட்டத்தில் எடுத்து வைக்கும் முதல் காலடியுமாகும்.

 
கலைமகள்.......... வளவனூர் புதுப்பாளையம் செல்வம் திபெத் நிகழ்ச்சி கேட்டு தெரிவித்த கருத்து
வணக்கம். இன்றைய 'சீனப் பண்பாடு' நிகழ்ச்சியில் 'திபெத்தின் வரலாற்று மீளாய்வு' என்ற கட்டுரையைக் கேட்டேன். திபெத்தில் ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றம் பற்றி விளக்கும் செய்தி விளக்கப்படம் ஒன்றை பார்வையிட்டபின்பு, சிலர் தெரிவித்த கருத்துக்களை அறிந்து கொண்டபோது, சீனாவின் வழிகாட்டுதலில், திபெத் பிரதேசம் எத்தகைய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. திபெத் ஆய்வு மையத்தின் தலைவர் திரு.லாபாசின்சோ அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள், இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் திபெத் எத்தகைய சீரழிவு நிலையில் இருந்தது என்பதை புரிய வைத்தன. குறிப்பாக, அப்போதைய திபெத்தில் ஆண் அடிமையும், பெண் அடிமையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனில், கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் உண்மையிலேயே எனக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.