• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-05-15 17:57:31    
தெங்பெஃங் ஷாவோலின் இப்போ வூ ஷு கல்லூரி

cri
Song Shan (சொங்ஷான்) மலையடி வாரத்தில், மேடும் பள்ளமுமான மலைச்சரிவுகளில் கம்பீரமாகக் காட்சி தருகிறது. ஹெனான் தெங்பெஃங் ஷாவோலின் இப்போ வூ ஷு கல்லூரி. அடர்த்தியான மரம் செடி கொடிகளுக்கு நடுவே, பரந்து விரிந்த விளையாட்டுத்திடல்கள். சரிவுகளில் ஒய்யாரமாகத் தோன்றும் வகுப்பறைக் கட்டிடங்கள். அவற்றுக்கு இடையே வளைந்து நெளிந்து செல்லும் சீரான பாதை. ஷாவோலின் கோயிலை நெருங்குவதற்கு முன்னால் 18 கி.மீ. தொலைவில் உள்ள தெங்பெஃங் நகரில், அமைந்துள்ள 83 குங்பூஃ பள்ளிகளில் முதன்மையான இந்தக் கல்லூரியின் வளாகத்திற்குள் சீன வானொலிச் செய்தியாளர் குழு நுழைந்ததும் ஆரவாரமான வரவேற்பு. பாதையின் இருமருங்கிலும் அணிவகுத்து நிற்கும் மாணவ மாணவிகள், வரவேற்பு பாடல், கரவொலி எழுப்பி, வாழ்த்தி, வரவேற்கின்றனர்.
வகுப்பறைகளுக்கும், தங்கும் விடுதிக்கும் ஊடாகச் செல்லும் பாதையின் ஒவ்வொரு திருப்பத்திலும் அமைந்துள்ள திடல்களில் மாணவர்கள் பல்வகை குங்பூஃ பயிற்சிகளை அரங்கேற்றிக் காட்டுகின்றனர்.

ஒரு லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 5 கோடி யுவான் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஷாவோலின் இப்போ வூ ஷு கல்லூரி 1977ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. 1995ஆம் ஆண்டில் இந்தக் கல்லூரிக்கு தற்போதுள்ள கம்பீரமான கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் 56000 சதுர மீட்டர் பரப்பில் பயிற்சித் திடல்களும், 72,000 சதுர மீட்டர் பரப்பில் வகுப்பறைக் கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி, இளநிலைப்பள்ளி, உயர் நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கணிணி மையம் என்று பல்வகைப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் 9 ஆண்டுக் கட்டாயக் கல்வித் திட்டத்தின் அடிப்படையில் 3 வயது முதல் 20 வயது வரையான மாணவ, மாணவிகளுக்கு பல்வகைப் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. கூடவே வூ ஷு எனப்படும் குங்பூஃ போர் விளையாட்டுக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுவதால் மாணவச் செல்வங்களின் உடலும் உள்ளமும் உரமேறுகின்றன. வூ ஷு தாவோலு, சாண்டா (Sanda), தைகுவான்டோ, நடிப்புக் கலை ஆகிய வூ ஷு பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. தற்போது சுமார் 2000 மாணவர்கள் இதில் கல்வி கற்கின்றனர். இது வரை இங்கு படித்த 1200 மாணவர்கள் பெய்ச்சிங் விளையாட்டுப் பல்கலைக்கழகம், ஷாங்காய், செங்து, சி ஆன், தியன்ஜின், ஷென்யாங், வூஹான் ஆகிய நகரங்களில் உள்ள உடற்பயிற்சிக் கல்லூரிகளிலும் சேர்ந்துள்ளனர். சுமார் 3000 மாணவர்கள் இங்கு கல்வி கற்ற பின்னர் ராணுவம், காவல்துறை, பொதுப் பாதுகாப்புத் துறை போன்றவற்றில் சேர்ந்து

 பணியாற்றுகின்றனர். ஆண்டுதோறும் 1100க்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் இங்கே வந்து ஷாவோலின் குங்பூஃ கலையை கற்று பயிற்சி எடுக்கின்றனர்.
இந்தக் கல்லூரியைத் தோற்றுவித்தவர் லியாங் யிச்சுவான் (Liang Yi Quan). அவர் இந்தக் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் குங்பூஃ கலை பற்றி விளக்கினார்.
(Liang Yi Quan உரை)
1931ஆம் ஆண்டு இந்த தெங்பெஃங் நகரில் பிறந்தவர் லியாங் யிச்சுவான். பாரம்பரிய குங்பூஃ குடும்பத்தைச் சேர்ந்த இவர், தமது தந்தையிடமே குங்பூஃ போர்க் கலையைக் கற்றார், பின்னர் ஷாவோலின் கோயிலில் இருந்த Zhen He என்ற துறவியிடம் பயிற்சி பெற்றார். அப்போது ஷிசுயி என்ற புத்தப் பெயர் சூட்டப்பட்டது. பல தேசிய அளவிலான பரிசுகளை வென்றார். வெறுமனே குங்பூஃ பயிற்சியோடு நின்று விடாமல், அந்தக் கலை பற்றி ஆராய்ந்து பல புத்தகங்களையும் எழுதினார். பல சண்டைத் திரைப்படங்கள் மற்றும் தொலைக் காட்சிப் படங்களிலும் நடித்திருக்கிறார். 75 வயதான போதிலும், தமது உரைக்கு நடுவே இளமைத்துடிப்போடு பல குங்பூஃ அசைவுகளைச் செய்து காட்டினார். லியாங் யிச்சுவான் உரையாற்றி முடிந்ததும் தெங்பெஃங் வூஷு கல்லூரி மாணவர்கள் துடிப்போடு. பல்வேறு குங்பூஃ பயிற்சிகளைச் செய்தார்கள்.


ஒலி மாணவர்கள் அரங்கேற்றம்
லியாங் யி ச்சுவான் மற்றும் அவருடைய சீடர்களின் சுறுசுறுப்பைக் கண்ட போது, தள்ளாமையைத் தள்ளி வைத்து விட்டு, துள்ளாட்டம் போட்டது எங்கள் உள்ளம். நாள் முழுதும் நடந்து திரிந்த அலுப்பை மறந்து உற்சாகத்தோடு திரும்பினோம்.